திருமுறை 3 · 3.050 · 11

திருத்தண்டலைநீள்நெறி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
கௌசிகம்
தலம்
தண்டலை நீள்நெறி (தண்டலைச்சேரி)
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

விரும்புந் திங்களுங் கங்கையும் விம்மவேசுரும்புந் தும்பியுஞ் சூழ்சடை யார்க்கிடங்கரும்புஞ் செந்நெலுங் காய்கமு கின்வளம்நெருங்குந் தண்டலை நீணெறி காண்மினே.
சொற்பிரிப்பு
விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே,சுரும்பும் தும்பியும் சூழ் சடையார்க்கு இடம்கரும்பும் செந்நெலும் காய் கமுகின் வளம்நெருங்கும் தண்டலை நீணெறி; காண்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

இகழுங் காலன் இதயத்தும் என்னுளுந்திகழுஞ் சேவடி யான்திருந் தும்மிடம்புகழும் பூமக ளும்புணர் பூசுரர்நிகழுந் தண்டலை நீணெறி காண்மினே.
சொற்பிரிப்பு
இகழும் காலன் இதயத்தும், என் உளும்,திகழும் சேவடி யான் திருந்தும்(ம்) இடம்புகழும் பூமகளும் புணர் பூசுரர்நிகழும் தண்டலை நீணெறி; காண்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பரந்த நீலப் படரெரி வல்விடங்கரந்த கண்டத்தி னான்கரு தும்மிடஞ்சுரந்த மேதி துறைபடிந் தோடையில்நிரந்த தண்டலை நீணெறி காண்மினே.
சொற்பிரிப்பு
பரந்த நீலப் படர் எரி வல்விடம்கரந்த கண்டத்தி னான் கருதும்(ம்) இடம்சுரந்த மேதி துறை படிந்து ஓடையில்நிரந்த தண்டலை நீணெறி; காண்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

தவந்த என்புந் தவளப் பொடியுமேஉவந்த மேனியி னானுறை யும்மிடஞ்சிவந்த பொன்னுஞ் செழுந்தர ளங்களும்நிவந்த தண்டலை நீணெறி காண்மினே.
சொற்பிரிப்பு
தவந்த என்பும், தவளப்பொடியுமே,உவந்த மேனியினான் உறையும்(ம்) இடம்சிவந்த பொன்னும் செழுந் தரளங்களும்நிவந்த தண்டலை நீணெறி; காண்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 5 -ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

6 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 6-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

7 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 7-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

8

இலங்கை வேந்தன் இருபது தோளிறவிலங்க லில்லடர்த் தான்விரும் பும்மிடஞ்சலங்கொள் இப்பி தரளமுஞ் சங்கமும்நிலங்கொள் தண்டலை நீணெறி காண்மினே.
சொற்பிரிப்பு
இலங்கை வேந்தன் இருபது தோள் இற,விலங்கலில் அடர்த் தான் விரும்பும்(ம்) இடம்சலம் கொள் இப்பி தரளமும் சங்கமும்நிலம் கொள் தண்டலை நீணெறி; காண்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

கருவ ருந்தியின் நான்முகன் கண்ணனென்றிருவ ருந்தெரி யாவொரு வன்னிடஞ்செருவ ருந்திய செம்பியன் கோச்செங்கண்நிருபர் தண்டலை நீணெறி காண்மினே.
சொற்பிரிப்பு
கரு வரு உந்தியின் நான்முகன், கண்ணன், என்றுஇருவரும் தெரியா ஒருவன்(ன்) இடம்செரு வருந்திய செம்பியன் கோச்செங்கண்-நிருபர் தண்டலை நீணெறி; காண்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கலவு சீவரத் தார்கையில் உண்பவர்குலவ மாட்டாக் குழகன் உறைவிடஞ்சுலவு மாமதி லுஞ்சுதை மாடமும்நிலவு தண்டலை நீணெறி காண்மினே.
சொற்பிரிப்பு
கலவு சீவரத்தார், கையில் உண்பவர்குலவமாட்டாக் குழகன் உறைவு இடம்சுலவு மா மதிலும், சுதை மாடமும்,நிலவு தண்டலை நீணெறி; காண்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

நீற்றர் தண்டலை நீணெறி நாதனைத்தோற்று மேன்மையர் தோணி புரத்திறைசாற்று ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்மாற்றில் செல்வர் மறப்பர் பிறப்பையே.
சொற்பிரிப்பு
நீற்றர், தண்டலை நீணெறி நாதனை,தோற்றும் மேன்மையர் தோணிபுரத்து இறைசாற்று ஞானசம் பந்தன்—தமிழ் வலார்மாற்று இல் செல்வர்; மறப்பர், பிறப்பையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.