1
அங்கை யாரழ லன்னழ கார்சடைக்கங்கை யான்கட வுள்ளிட மேவியமங்கை யானுறை யும்மழ பாடியைத்தங்கை யாற்றொழு வார்தக வாளரே.
சொற்பிரிப்பு
அங்கை ஆர் அழலன்(ன்), அழகு ஆர் சடைக்கங்கையான், கடவுள்(ள்), இடம் மேவியமங்கையான், உறையும் மழபாடியைத்தம் கையால்—தொழுவார் தகவாளரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.