1
காட்டு மாவ துரித்துரி போர்த்துடல்நாட்ட மூன்றுடை யாயுரை செய்வனான்வேட்டு வேள்விசெய் யாவமண் கையரைஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே.
சொற்பிரிப்பு
காட்டு மா அது உரித்து, உரி போர்த்து உடல்,நாட்டம் மூன்று உடையாய்! உரைசெய்வன், நான்;வேட்டு, வேள்வி செய்யா அமண்கையரைஓட்டி வாது செயத் திரு உள்ளமே?
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.