1
முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவேமத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
சொற்பிரிப்பு
முத்து இலங்கு முறுவல்(ல்) உமை அஞ்சவே,மத்தயானை மறுக(வ்), உரி வாங்கி, அக்கத்தை போர்த்த கடவுள் கருகாவூர் எம்அத்தர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.