திருமுறை 3 · 3.044 · 11

திருக்கழிப்பாலை

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
கௌசிகம்
தலம்
கழிப்பாலை
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

வெந்த குங்கிலி யப்புகை விம்மவேகந்தம் நின்றுல வுங்கழிப் பாலையார்அந்த மும்மள வும்மறி யாததோர்சந்த மாலவர் மேவிய சாந்தமே.
சொற்பிரிப்பு
வெந்த குங்கிலி யப்புகை விம்மவேகந்தம் நின்று உலவும் கழிப்பாலையார்அந்தமும்(ம்) அளவும்(ம்) அறியாதது ஓர்சந்தமால், அவர் மேவிய சந்தமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வானி லங்க விளங்கும் இளம்பிறைதான லங்கல் உகந்த தலைவனார்கானி லங்க வருங்கழிப் பாலையார்மான லம்மட நோக்குடை யாளொடே.
சொற்பிரிப்பு
"வான் இலங்க விளங்கும் இளம்பிறை-தான் அலங்கல் உகந்த தலைவனார்கான் இலங்க வரும் கழிப்பாலையார்மான் நலம் மடநோக்கு உடையாளொடே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கொடிகொள் ஏற்றினர் கூற்றை யுதைத்தனர்பொடிகொள் மார்பினிற் பூண்டதொ ராமையர்கடிகொள் பூம்பொழில் சூழ்கழிப் பாலையுள்அடிகள் செய்வன ஆர்க்கறி வொண்ணுமே.
சொற்பிரிப்பு
"கொடி கொள் ஏற்றினர்; கூற்றை உதைத்தனர்பொடி கொள் மார்பினில் பூண்டது ஓர் ஆமையர்;கடி கொள் பூம்பொழில் சூழ் கழிப்பாலையுளஅடிகள் செய்வன ஆர்க்கு அறிவு ஒண்ணுமே?"
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பண்ண லம்பட வண்டறை கொன்றையின்தண்ண லங்கல் உகந்த தலைவனார்கண்ண லங்க வருங்கழிப் பாலையுள்அண்ண லெங்கட வுள்ளவன் நல்லனே.
சொற்பிரிப்பு
பண் நலம் பட வண்டு அறை கொன்றையின்தண் அலங்கல் உகந்த தலைவனார்கண் நலம் கவரும் கழிப்பாலையுளஅண்ணல்; எம் கடவுள்(ள்) அவன் அல்லனே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஏரி னாருல கத்திமை யோரொடும்பாரி னாருட னேபர வப்படுங்காரி னார்பொழில் சூழ்கழிப் பாலையெம்சீரி னார்கழ லேசிந்தை செய்ம்மினே.
சொற்பிரிப்பு
ஏரின் ஆர் உலகத்து இமையோரொடும்பாரினார் உடனே பரவப்படும்,காரின் ஆர் பொழில் சூழ், கழிப்பாலை எம்சீரினார் கழலே சிந்தை செய்(ம்)மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

துள்ளும் மான்மறி அங்கையி லேந்தியூர்கொள்வ னாரிடு வெண்டலை யிற்பலிகள்வ னாருறை யுங்கழிப் பாலையைஉள்ளு வார்வினை யாயின வோயுமே.
சொற்பிரிப்பு
துள்ளும் மான்மறி அம் கையில் ஏந்தி, ஊர்கொள்வனார், இடு வெண்தலையில் பலி;கள்வனார்; உறையும் கழிப்பாலையைஉள்ளுவார் வினை ஆயின ஓயுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மண்ணி னார்மலி செல்வமும் வானமும்எண்ணி நீரினி தேத்துமின் பாகமும்பெண்ணி னார்பிறை நெற்றியொ டுற்றமுக்கண்ணி னாருறை யுங்கழிப் பாலையே.
சொற்பிரிப்பு
மண்ணின் ஆர் மலி செல்வமும், வானமும்,எண்ணி, நீர் இனிது ஏத்துமின்—பாகமும்பெண்ணினார், பிறை நெற்றியொடு உற்ற முக்கண்ணினார், உறையும் கழிப்பாலையே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

இலங்கை மன்னனை ஈரைந் திரட்டிதோள்துலங்க வூன்றிய தூமழு வாளினார்கலங்கள் வந்துல வுங்கழிப் பாலையைவலங்கொள் வார்வினை யாயின மாயுமே.
சொற்பிரிப்பு
இலங்கை மன்னனை ஈர்—ஐந்து இரட்டிதோள்துலங்க ஊன்றிய தூ மழுவாளினார்கலங்கள் வந்து உலவும், கழிப்பாலையைவலம் கொள்வார் வினை ஆயின மாயுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஆட்சி யால்அல ரானொடு மாலுமாய்த்தாட்சி யாலறி யாது தளர்ந்தனர்காட்சி யாலறி யான்கழிப் பாலையைமாட்சி யால்தொழு வார்வினை மாயுமே.
சொற்பிரிப்பு
ஆட்சியால் அல ரானொடு மாலும் ஆய்த்தாட்சியால் அறி யாது தளர்ந்தனர்;காட்சியால் அறி யான் கழிப்பாலையைமாட்சியால்—தொழு வார் வினை மாயுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

செய்ய நுண்துவ ராடையி னாரொடுமெய்யின் மாசு பிறக்கிய வீறிலாக்கையர் கேண்மையெ னோகழிப் பாலையெம்ஐயன் சேவடி யேஅடைந் துய்ம்மினே.
சொற்பிரிப்பு
செய்ய நுண் துவர் ஆடையினாரொடுமெய்யின் மாசு பிறக்கிய வீறு இலாக்கையர் கேண்மை எனோ? கழிப்பாலை எம்ஐயன் சேவடியே அடைந்து உய்(ம்)மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

அந்தண் காழி அருமறை ஞானசம்பந்தன் பாய்புனல் சூழ்கழிப் பாலையைச்சிந்தை யாற்சொன்ன செந்தமிழ் வல்லவர்முந்தி வானுல காடன் முறைமையே.
சொற்பிரிப்பு
அம் தண் காழி அருமறை ஞானசம்-பந்தன், பாய் புனல் சூழ் கழிப்பாலையைச்சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர்முந்தி வான் உலகு ஆடல் முறைமையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.