1
நிறைவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்குறைவெண்டிங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்சிறைவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்இறைவனென்றே யுலகெலாம் ஏத்தநின்ற பெருமானே.
சொற்பிரிப்பு
நிறை வெண் திங்கள் வாள்முக மாதர் பாட, நீள்சடைக்குறை வெண் திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய கொள்கையான்-சிறைவண்டு யாழ்செய் பைம்பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான்;“இறைவன்!” என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.