1
கரமுனம்மல ராற்புனல்மலர் தூவியேகலந் தேத்துமின்பரமனூர்பல பேரினாற்பொலி பத்தர்சித்தர்கள் தாம்பயில்வரமுன்னவ்வருள் செய்யவல்லஎம் ஐயன்நாடொறும் மேயசீர்ப்பிரமனூர்பிர மாபுரத்துறை பிஞ்ஞகனருள் பேணியே.
சொற்பிரிப்பு
கரம் முனம் மலரால், புனல் மலர் தூவியே கலந்து ஏத்துமின்-பரமன் ஊர் பலபேரினால் பொலி, பத்தர் சித்தர்கள் தாம் பயில்,வரம் முன்ன(வ்) அருள் செய்ய வல்ல எம் ஐயன் நாள்தொறும் மேய சீர்ப்பிரமன் ஊர், பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன்(ன்) அருள் பேணியே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.