1
சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம்உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்திஎந்தையார் இணையடி யென்மனத் துள்ளவே.
சொற்பிரிப்பு
சந்தம், ஆர், அகிலொடு, சாதி, தேக்க(ம்) மரம்,உந்தும் மா முகலியின் கரையினில், உமையொடும்,மந்தம் ஆர் பொழில் வளர் மல்கு வண் காளத்திஎந்தையார் இணை அடி, என் மனத்து உள்ளவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.