1
முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடுந்தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்மன்னுமா காவிரி வந்தடி வருடநற்செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.
சொற்பிரிப்பு
முன்னை நால் மறை அவை முறை முறை, குறையொடும்,தன்ன தாள் தொழுது எழ நின்றவன் தன் இடம்மன்னு மா காவிரி வந்து அடி வருட, நல்செந்நெல் ஆர் வளவயல்— தென்குடித்திட்டையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.