திருமுறை 3 · 3.034 · 11

திருமுதுகுன்றம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
கொல்லி
தலம்
முதுகுன்றம்
நாடு
நடுநாடு

1

வண்ணமா மலர்கொடு வானவர் வழிபடஅண்ணலார் ஆயிழை யாளொடும் அமர்விடம்விண்ணின்மா மழைபொழிந் திழியவெள் ளருவிசேர்திண்ணிலார் புறவணி திருமுது குன்றமே.
சொற்பிரிப்பு
வண்ண மா மலர் கொடு வானவர் வழிபட,அண்ணலார் ஆயிழை யாளொடும் அமர்வு இடம்விண்ணின் மா மழை பொழிந்து இழிய, வெள் அருவி சேர்திண்ணில் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வெறியுலாங் கொன்றையந் தாரினான் மேதகுபொறியுலாம் அரவசைத் தாடியோர் புண்ணியன்மறியுலாங் கையினான் மங்கையோ டமர்விடஞ்செறியுளார் புறவணி திருமுது குன்றமே.
சொற்பிரிப்பு
வெறி உலாம் கொன்றை அம் தாரினான், மேதகுபொறி உலாம் அரவு அசைத்து ஆடி, ஓர் புண்ணியன்,மறி உலாம் கையினான், மங்கையோடு அமர்வு இடம்செறியுள் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஏறினார் விடைமிசை யிமையவர் தொழவுமைகூறனார் கொல்புலித் தோலினார் மேனிமேல்நீறனார் நிறைபுனற் சடையனார் நிகழ்விடந்தேறலார் பொழிலணி திருமுது குன்றமே.
சொற்பிரிப்பு
ஏறனார், விடைமிசை; இமையவர் தொழ உமை-கூறனார்; கொல் புலித் தோலினார்; மேனிமேல்நீறனார்; நிறைபுனல் சடையனார்; நிகழ்வு இடம்தேறல் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

உரையினார் உறுபொரு ளாயினான் உமையொடும்விரையினார் கொன்றைசேர் சடையினார் மேவிடம்உரையினார் ஒலியென வோங்குமுத் தாறுமெய்த்திரையினார் எறிபுனல் திருமுது குன்றமே.
சொற்பிரிப்பு
உரையின் ஆர் உறு பொருள் ஆயினான், உமையொடும்;விரையின் ஆர் கொன்றை சேர் சடையினார்; மேவு இடம்உரையின் ஆர் ஒலி என ஓங்கு முத்தாறு மெய்த்திரையின் ஆர் எறி புனல்— திரு முதுகுன்றமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கடியவா யினகுரற் களிற்றினைப் பிளிறவோர்இடியவெங் குரலினோ டாளிசென் றிடுநெறிவடியவாய் மழுவினன் மங்கையோ டமர்விடம்செடியதார் புறவணி திருமுது குன்றமே.
சொற்பிரிப்பு
கடிய ஆயின குரல் களிற்றினைப் பிளிற, ஓர்இடிய வெங்குரலினோடு ஆளி சென்றிடு நெறி,வடிய வாய் மழுவினன் மங்கையோடு அமர்வு இடம்செடி அது ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கானமார் கரியின்ஈர் உரிவையார் பெரியதோர்வானமார் மதியினோ டரவர்தாம் மருவிடம்ஊனமா யினபிணி யவைகெடுத் துமையொடுந்தேனமார் பொழிலணி திருமுது குன்றமே.
சொற்பிரிப்பு
கானம் ஆர் கரியின் ஈர் உரிவையார், பெரியது ஓர்வானம் ஆர் மதியினோடு அரவர், தாம் மருவு இடம்,ஊனம் ஆயின பிணி அவை கெடுத்து, உமையொடும்தேன் அம் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மஞ்சர்தாம் மலர்கொடு வானவர் வணங்கிடவெஞ்சொலார் வேடரோ டாடவர் விரும்பவேஅஞ்சொலாள் உமையொடும் மமர்விட மணிகலைச்செஞ்சொலார் பயில்தருந் திருமுது குன்றமே.
சொற்பிரிப்பு
மஞ்சர் தாம், மலர்கொடு வானவர் வணங்கிட,வெஞ்சொலார் வேடரோடு ஆடவர் விரும்பவே,அம் சொலாள் உமையொடும்(ம்) அமர்வு இடம் அணி கலைச்செஞ் சொலார் பயில்தரும் திரு முதுகுன்றமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

காரினார் அமர்தருங் கயிலைநன் மலையினைஏரினார் முடியிரா வணனெடுத் தானிறவாரினார் முலையொடும் மன்னினார் மருவிடம்சீரினார் திகழ்தருந் திருமுது குன்றமே.
சொற்பிரிப்பு
காரினார் அமர்தரும் கயிலை நல் மலையினைஏரின் ஆர் முடி இராவணன், எடுத்தான், இற,வாரின் ஆர்முலையொடும் மன்னினார் மருவு இடம்சீரினார் திகழ்தரும் திரு முதுகுன்றமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஆடினார் கானகத் தருமறை யின்பொருள்பாடினார் பலபுகழ்ப் பரமனார் இணையடிஏடினார் மலர்மிசை அயனுமா லிருவரும்தேடினார் அறிவொணார் திருமுது குன்றமே.
சொற்பிரிப்பு
ஆடினார், கானகத்து; அருமறையின் பொருள்பாடினார்; பலபுகழ்ப் பரமனார்; இணை அடிஏடின் ஆர் மலர்மிசை அயனும், மால், இருவரும்தேடினார் அறிவு ஒணார்; திரு முதுகுன்றமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மாசுமெய் தூசுகொண் டுழல்சமண் சாக்கியர்பேசுமெய் யுளவல்ல பேணுவீர் காணுமின்வாசமார் தருபொழில் வண்டினம் இசைசெயத்தேசமார் புகழ்மிகுந் திருமுது குன்றமே.
சொற்பிரிப்பு
மாசு மெய் தூசு கொண்டு உழல் சமண் சாக்கியர்பேசு மெய் உள அல; பேணுவீர்! காணுமின்-வாசம் ஆர்தரு பொழில் வண்டு இனம்(ம்) இசை செய,தேசம் ஆர் புகழ் மிகும் திரு முதுகுன்றமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

திண்ணினார் புறவணி திருமுது குன்றரைநண்ணினான் காழியுள் ஞானசம் பந்தன்சொல்எண்ணினால் ஈரைந்து மாலையும் இயலுமாப்பண்ணினாற் பாடுவார்க் கில்லையாம் பாவமே.
சொற்பிரிப்பு
திண்ணின் ஆர் புறவு அணி திரு முதுகுன்றரைநண்ணினான், காழியுள் ஞானசம்பந்தன், சொல்எண்ணினார், ஈர் ஐந்து மாலையும் இயலுமாப்பண்ணினால் பாடுவார்க்கு இல்லை ஆம், பாவமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.