திருமுறை 3 · 3.033 · 11

திருஉசாத்தானம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
கொல்லி
தலம்
உசாத்தானம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

நீரிடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவான்போருடைச் சுக்கிரீ வன்னநு மான்றொழக்காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தஎம்சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே.
சொற்பிரிப்பு
நீர் இடைத் துயின்றவன், தம்பி, நீள் சாம்புவான்,போர் உடைச் சுக்கிரீவன், அனுமான், தொழ;கார் உடை நஞ்சு உண்டு, காத்து; அருள்செய்த எம்சீர் உடைச் சேடர் வாழ் திரு உசாத்தானமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கொல்லையே றுடையவன் கோவண ஆடையன்பல்லையார் படுதலைப் பலிகொளும் பரமனார்முல்லையார் புறவணி முதுபதி நறைகமழ்தில்லையான் உறைவிடந் திருவுசாத் தானமே.
சொற்பிரிப்பு
கொல்லை ஏறு உடையவன், கோவண ஆடையன்,பல்லை ஆர் படுதலைப் பலி கொளும் பரமனார்முல்லை ஆர் புறவு அணி முது பதி நறை கமழ்தில்லையான் உறைவு இடம் திரு உசாத்தானமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

தாமலார் போலவே தக்கனார் வேள்வியைஊமனார் தங்கனா வாக்கினான் ஒருநொடிக்காமனா ருடல்கெடக் காய்ந்தஎங் கண்ணுதல்சேமமா உறைவிடந் திருவுசாத் தானமே.
சொற்பிரிப்பு
தாம் அலார் போலவே தக்கனார் வேள்வியைஊமனார் தம் கனா ஆக்கினான், ஒரு நொடி;காமனார் உடல் கெடக் காய்ந்த எம் கண்ணுதல்;சேமமா உறைவு இடம் திரு உசாத்தானமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மறிதரு கரத்தினான் மால்விடை யேறியான்குறிதரு கோலநற் குணத்தினார் அடிதொழநெறிதரு வேதியர் நித்தலும் நியமஞ்செய்செறிதரு பொழிலணி திருவுசாத் தானமே.
சொற்பிரிப்பு
மறி தரு கரத்தினான், மால்விடை ஏறியான்,குறி தரு கோல நல் குணத்தினார் அடி தொழ,நெறி தரு வேதியர் நித்தலும் நியமம் செய்செறி தரு பொழில் அணி திரு உசாத்தானமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 5-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

6 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 6-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

7

பண்டிரைத் தயனுமா லும்பல பத்தர்கள்தொண்டிரைத் தும்மலர் தூவித்தோத் திரஞ்சொலக்கொண்டிரைக் கொடியொடுங் குருகினின் நல்லினந்தெண்டிரைக் கழனிசூழ் திருவுசாத் தானமே.
சொற்பிரிப்பு
பண்டு, இரைத்து அயனும் மாலும், பலபத்தர்கள்தொண்டு இரைத்தும், மலர் தூவித் தோத்திரம் சொல,கொண்டு இரைக் கொடியொடும் குருகினின் நல் இனம்தெண்திரைக் கழனி சூழ் திரு உசாத்தானமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

மடவரல் பங்கினன் மலைதனை மதியாதுசடசட எடுத்தவன் தலைபத்து நெரிதரஅடர்தர ஊன்றியங் கேயவற் கருள்செய்தான்திடமென வுறைவிடந் திருவுசாத் தானமே.
சொற்பிரிப்பு
மடவரல் பங்கினன்; மலைதனை மதியாதுசடசட எடுத்தவன் தலைபத்தும் நெரிதர,அடர்தர ஊன்றி, அங்கே அவற்கு அருள்செய்தான்;திடம் என உறைவு இடம் திரு உசாத்தானமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஆணலார் பெண்ணலார் அயனொடு மாலுக்குங்காணொணா வண்ணத்தான் கருதுவார் மனத்துளான்பேணுவார் பிணியொடும் பிறப்பறுப் பானிடஞ்சேணுலா மாளிகைத் திருவுசாத் தானமே.
சொற்பிரிப்பு
ஆண் அலார், பெண் அலார்,அயனொடு மாலுக்கும்காண ஒணா வண்ணத்தான்,கருதுவார் மனத்து உளான்,பேணுவார் பிணியொடும்பிறப்பு அறுப்பான், இடம்சேண் உலாம் மாளிகைத்திரு உசாத்தானமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கானமார் வாழ்க்கையான் காரமண் தேரர்சொல்ஊனமாக் கொண்டுநீர் உரைமின்உய் யவெனில்வானமார் மதிலணி மாளிகை வளர்பொழில்தேனமா மதியந்தோய் திருவுசாத் தானமே
சொற்பிரிப்பு
கானம் ஆர் வாழ்க்கையான்,கார் அமண் தேரர் சொல்ஊனமாக் கொண்டு, நீர்உரைமின், உய்ய எனில்வானம் ஆர் மதில், அணிமாளிகை, வளர் பொழில்,தேன மா மதியம் தோய்திரு உசாத்தானமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

வரைதிரிந் திழியுநீர் வளவயற் புகலிமன்திரைதிரிந் தெறிகடல் திருவுசாத் தானரைஉரைதெரிந் துணருஞ்சம் பந்தனொண் தமிழ்வல்லார்நரைதிரை யின்றியே நன்னெறி சேர்வரே.
சொற்பிரிப்பு
வரை திரிந்து இழியும் நீர்வளவயல் புகலி மன்,திரை திரிந்து எறிகடல்—திரு உசாத்தானரைஉரை தெரிந்து உணரும்சம்பந்தன், ஒண் தமிழ் வல்லார்நரை திரை இன்றியேநன்நெறி சேர்வரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.