திருமுறை 3 · 3.032 · 11

திருஏடகம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
கொல்லி
தலம்
ஏடகம்
நாடு
பாண்டியநாடு

1

வன்னியும் மத்தமும் மதிபொதி சடையினன்பொன்னியல் திருவடி புதுமல ரவைகொடுமன்னிய மறையவர் வழிபட அடியவர்இன்னிசை பாடலர் ஏடகத் தொருவனே.
சொற்பிரிப்பு
வன்னியும் மத்தமும் மதி பொதி சடையினன்,பொன் இயல் திருவடி புதுமலர் அவைகொடுமன்னிய மறையவர் வழிபட, அடியவர்இன் இசை பாடல் ஆர் ஏடகத்து ஒருவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கொடிநெடு மாளிகை கோபுரங் குளிர்மதிவடிவுற அமைதர மருவிய ஏடகத்தடிகளை அடிபணிந் தரற்றுமின் அன்பினால்இடிபடும் வினைகள்போய் இல்லைய தாகுமே.
சொற்பிரிப்பு
கொடி நெடுமாளிகை, கோபுரம், குளிர்மதிவடிவு உற அமைதர, மருவிய ஏடகத்துஅடிகளை அடி பணிந்து அரற்றுமின், அன்பினால்!இடிபடும் வினைகள் போய் இல்லை அது ஆகுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

குண்டலந் திகழ்தரு காதுடைக் குழகனைவண்டலம் பும்மலர்க் கொன்றைவான் மதியணிசெண்டலம் பும்விடைச் சேடனூர் ஏடகங்கண்டுகை தொழுதலுங் கவலைநோய் கழலுமே.
சொற்பிரிப்பு
குண்டலம் திகழ்தரு காது உடைக் குழகனைவண்டு அலம்பும் மலர்க் கொன்றை, வான்மதி, அணிசெண்டு அலம்பும் விடைச் சேடன்—ஊர் ஏடகம்கண்டு கைதொழுதலும், கவலை நோய் கழலுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஏலமார் தருகுழல் ஏழையோ டெழில்பெறுங்கோலமார் தருவிடைக் குழகனார் உறைவிடஞ்சாலமா தவிகளுஞ் சந்தனஞ் சண்பகஞ்சீலமார் ஏடகஞ் சேர்தலாஞ் செல்வமே.
சொற்பிரிப்பு
ஏலம் ஆர்தரு குழல் ஏழையோடு எழில் பெறும்கோலம் ஆர்தரு விடைக் குழகனார் உறைவு இடம்சால(ம்) மாதவிகளும், சந்தனம், சண்பகம்,சீலம் ஆர் ஏடகம் சேர்தல் ஆம், செல்வமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வரியணி நயனிநன் மலைமகள் மறுகிடக்கரியினை யுரிசெய்த கறையணி மிடறினன்பெரியவன் பெண்ணினோ டாணலி யாகியஎரியவன் உறைவிடம் ஏடகக் கோயிலே.
சொற்பிரிப்பு
வரி அணி நயனி நல் மலைமகள் மறுகிட,கரியினை உரிசெய்த கறை அணி மிடறினன்;பெரியவன்; பெண்ணினோடு ஆண் அலி ஆகியஎரியவன்; உறைவு இடம் ஏடகக் கோயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பொய்கையின் பொழிலுறு புதுமலர்த் தென்றலார்வைகையின் வடகரை மருவிய ஏடகத்தையனை அடிபணிந் தரற்றுமின் அடர்தரும்வெய்யவன் பிணிகெட வீடெளி தாகுமே.
சொற்பிரிப்பு
பொய்கையின் பொழில் உறு புதுமலர்த் தென்றல் ஆர்வைகையின் வடகரை மருவிய ஏடகத்துஐயனை அடி பணிந்து, அரற்றுமின்! அடர்தரும்வெய்ய வன்பிணி கெட, வீடு எளிது ஆகுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 7-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

8

தடவரை யெடுத்தவன் தருக்கிறத் தோளடர்படவிரல் ஊன்றியே பரிந்தவற் கருள்செய்தான்மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும்இடமுடைச் சடையினன் ஏடகத் திறைவனே.
சொற்பிரிப்பு
தடவரை எடுத்தவன் தருக்கு இற, தோள் அடர்பட, விரல் ஊன்றியே, பரிந்து அவற்கு அருள் செய்தான்;மடவரல், எருக்கொடு, வன்னியும், மத்தமும்,இடம் உடைச் சடையினன்— ஏடகத்து இறைவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பொன்னுமா மணிகளும் பொருதிரைச் சந்தகில்தன்னுளார் வைகையின் கரைதனிற் சமைவுறஅன்னமாம் அயனுமா லடிமுடி தேடியும்இன்னவா றெனவொணான் ஏடகத் தொருவனே.
சொற்பிரிப்பு
பொன்னும், மா மணிகளும், பொருதிரைச் சந்து அகில்தன்னுள் ஆர் வைகையின் கரைதனில் சமைவு உற;அன்னம் ஆம் அயனும், மால், அடி முடி தேடியும்இன்ன ஆறு என ஒணான்— ஏடகத்து ஒருவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

குண்டிகைக் கையினர் குணமிலாத் தேரர்கள்பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்வண்டிரைக் கும்மலர்க் கொன்றையும் வன்னியும்இண்டைசேர்க் குஞ்சடை ஏடகத் தெந்தையே.
சொற்பிரிப்பு
குண்டிகைக் கையினர், குணம் இலாத் தேரர்கள்பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்வண்டு இரைக்கும் மலர்க் கொன்றையும் வன்னியும்இண்டை சேர்க்கும் சடை ஏடகத்து எந்தையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

கோடுசந் தனமகில் கொண்டிழி வைகைநீர்ஏடுசென் றணைதரும் ஏடகத் தொருவனைநாடுதென் புகலியுள் ஞானசம் பந்தனபாடல்பத் திவைவல்லார்க் கில்லையாம் பாவமே.
சொற்பிரிப்பு
கோடு, சந்தனம், அகில், கொண்டு இழி வைகை நீர்ஏடு சென்று அணைதரும் ஏடகத்து ஒருவனை,நாடு தென்புகலியுள் ஞானசம்பந்தனபாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம், பாவமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.