1
பைத்தபாம் போடரைக் கோவணம் பாய்புலிமொய்த்தபேய் கண்முழக் கம்முது காட்டிடைநித்தமா கந்நட மாடிவெண் ணீறணிபித்தர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.
சொற்பிரிப்பு
பைத்த பாம்போடு, அரைக்கோவணம், பாய் புலி,மொய்த்த பேய்கள் முழக்கம்முதுகாட்டு இடை,நித்தம் ஆக(ந்) நடம் ஆடி,வெண் நீறு அணிபித்தர் கோயில்(ல்)அரதைப் பெரும்பாழியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.