திருமுறை 3 · 3.029 · 11

மேலைத்திருக்காட்டுப்பள்ளி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
கொல்லி
தலம்
மேலைத்திருக்காட்டுப்பள்ளி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன்ஊருமன் னும்பலி யுண்பதும் வெண்டலைகாருமன் னும்பொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளிநீருமன் னுஞ்சடை நிமலர்தந் நீர்மையே.
சொற்பிரிப்பு
வாரு மன்னும் முலை மங்கை ஓர் பங்கினன்;ஊரு மன்னும் பலி உண்பதும் வெண்தலைகாரு மன்னும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளிநீரு மன்னும் சடை நிமலர் தம் நீர்மையே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நிருத்தனார் நீள்சடை மதியொடு பாம்பணிகருத்தனார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளிஅருத்தனார் அழகமர் மங்கையோர் பாகமாப்பொருத்தனார் கழலிணை போற்றுதல் பொருளதே.
சொற்பிரிப்பு
நிருத்தனார், நீள் சடை மதியொடு பாம்பு அணிகருத்தனார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளிஅருத்தனார்; அழகு அமர் மங்கை ஓர்பாகமாப்பொருத்தனார், கழல் இணை போற்றுதல் பொருளதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பண்ணினார் அருமறை பாடினார் நெற்றியோர்கண்ணினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளிவிண்ணினார் விரிபுனல் மேவினார் சடைமுடிஅண்ணலார் எம்மையா ளுடையஎம் அடிகளே.
சொற்பிரிப்பு
பண்ணின் ஆர் அருமறை பாடினார், நெற்றி ஓர்கண்ணினார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளிவிண்ணின் ஆர் விரிபுனல் மேவினார், சடைமுடிஅண்ணலார், எம்மை ஆள் உடைய எம் அடிகளே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பணங்கொள்நா கம்மரைக் கார்ப்பது பல்பலிஉணங்கலோ டுண்கலன் உறைவது காட்டிடைக்கணங்கள்கூ டித்தொழு தேத்துகா ட்டுப்பள்ளிநிணங்கொள்சூ லப்படை நிமலர்தந் நீர்மையே.
சொற்பிரிப்பு
பணம் கொள் நாகம் அரைக்கு ஆர்ப்பது; பல் பலிஉணங்கல் ஓடு உண்கலன்; உறைவது காட்டு இடைகணங்கள் கூடித் தொழுது ஏத்து காட்டுப்பள்ளிநிணம் கொள் சூலப்படை நிமலர் தம் நீர்மையே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வரையுலாஞ் சந்தொடு வந்திழி காவிரிக்கரையுலாம் இடுமணல் சூழ்ந்தகாட் டுப்பள்ளித்திரையுலாங் கங்கையுந் திங்களுஞ் சூடியங்கரையுலாங் கோவணத் தடிகள்வே டங்களே.
சொற்பிரிப்பு
வரை உலாம் சந்தொடு வந்து இழி காவிரிக்கரை உலாம் இடு மணல் சூழ்ந்த காட்டுப்பள்ளிதிரை உலாம் கங்கையும் திங்களும் சூடி, அங்குஅரை உலாம் கோவணத்து அடிகள் வேடங்களே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

வேதனார் வெண்மழு ஏந்தினார் அங்கமுன்ஓதினார் உமையொரு கூறனார் ஒண்குழைக்காதினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளிநாதனார் திருவடி நாளும்நின் றேத்துமே.
சொற்பிரிப்பு
வேதனார், வெண்மழு ஏந்தினார், அங்கம் முன்ஓதினார், உமை ஒரு கூறனார், ஒண்குழைக்காதினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளிநாதனார்; திருவடி நாளும் நின்று ஏத்துமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மையினார் மிடறனார் மான்மழு வேந்தியகையினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளித்தையலோர் பாகமாத் தண்மதி சூடியஐயனார் அடிதொழ அல்லலொன் றில்லையே.
சொற்பிரிப்பு
மையின் ஆர் மிடறனார், மான் மழு ஏந்தியகையினார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளித்தையல் ஓர்பாகமாத் தண்மதி சூடியஐயனார்; அடி தொழ, அல்லல் ஒன்று இல்லையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

சிலைதனால் முப்புரஞ் செற்றவன் சீரினார்மலைதனால் வல்லரக் கன்வலி வாட்டினான்கலைதனார் புறவணி மல்குகாட் டுப்பள்ளிதலைதனால் வணங்கிடத் தவமது ஆகுமே.
சொற்பிரிப்பு
சிலைதனால் முப்புரம் செற்றவன், சீரின் ஆர்மலைதனால் வல் அரக்கன் வலி வாட்டினான்,கலைதனால் புறவு அணி மல்கு காட்டுப்பள்ளிதலைதனால் வணங்கிட, தவம் அது ஆகுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

செங்கண்மால் திகழ்தரு மலருறை திசைமுகன்தங்கையால் தொழுதெழத் தழலுரு வாயினான்கங்கையார் சடையினான் கருதுகாட் டுப்பள்ளிஅங்கையால் தொழுமவர்க் கல்லலொன் றில்லையே.
சொற்பிரிப்பு
செங்கண் மால், திகழ்தரு மலர் உறை திசைமுகன்,தம் கையால்—தொழுது எழ, தழல் உரு ஆயினான்-கங்கை ஆர் சடையினான்— கருது காட்டுப்பள்ளிஅம் கையால் தொழுமவர்க்கு, அல்லல் ஒன்று இல்லையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

போதியார் பிண்டியா ரென்றஅப் பொய்யர்கள்வாதினால் உரையவை மெய்யல வைகலுங்காரினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளிஏரினால் தொழுதெழ இன்பம்வந் தெய்துமே.
சொற்பிரிப்பு
போதியார், பிண்டியார், என்ற அப்பொய்யர்கள்வாதினால் உரை அவை மெய் அல; வைகலும்,காரின் ஆர் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளிஏரினால்—தொழுது எழ, இன்பம் வந்து எய்துமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

பொருபுனல் புடையணி புறவநன் னகர்மன்னன்அருமறை யவைவல்ல அணிகொள்சம் பந்தன்சொல்கருமணி மிடற்றினன் கருதுகாட் டுப்பள்ளிபரவிய தமிழ்சொல்லப் பறையும்மெய்ப் பாவமே.
சொற்பிரிப்பு
பொரு புனல் புடை அணி புறவ நன் நகர் மன்னன்-அருமறை அவை வல அணி கொள் சம்பந்தன்—சொல்,கருமணி மிடற்றினன் கருது காட்டுப்பள்ளிபரவிய தமிழ் சொல்லப் பறையும், மெய்ப் பாவமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.