திருமுறை 3 · 3.028 · 11

திருமழபாடி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
கொல்லி
தலம்
மழபாடி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

காலையார் வண்டினங் கிண்டிய காருறுஞ்சோலையார் பைங்கிளி சொற்பொருள் பயிலவேவேலையார் விடமணி வேதியன் விரும்பிடம்மாலையார் மதிதவழ் மாமழ பாடியே.
சொற்பிரிப்பு
காலை ஆர் வண்டு இனம் கிண்டிய, கார் உறும்,சோலை ஆர் பைங்கிளி சொல் பொருள் பயிலவே,வேலை ஆர் விடம் அணி வேதியன் விரும்பு இடம்மாலை ஆர் மதி தவழ் மா மழபாடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கறையணி மிடறுடைக் கண்ணுதல் நண்ணியபிறையணி செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுமூர்துறையணி குருகினந் தூமலர் துதையவேமறையணி நாவினான் மாமழ பாடியே.
சொற்பிரிப்பு
கறை அணி மிடறு உடைக் கண்ணுதல், நண்ணியபிறை அணி செஞ்சடைப் பிஞ்ஞகன், பேணும் ஊர்துறை அணி குருகு இனம் தூ மலர் துதையவே,மறை அணி நாவினான் மா மழபாடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அந்தணர் வேள்வியும் அருமறைத் துழனியுஞ்செந்தமிழ்க் கீதமுஞ் சீரினால் வளர்தரப்பந்தணை மெல்விர லாளொடும் பயில்விடம்மந்தம்வந் துலவுசீர் மாமழ பாடியே.
சொற்பிரிப்பு
அந்தணர் வேள்வியும், அருமறைத் துழனியும்,செந்தமிழ்க் கீதமும், சீரினால் வளர்தர,பந்து அணை மெல்விர லாளொடும் பயில்வு இடம்மந்தம் வந்து உலவு சீர் மா மழபாடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அத்தியின் உரிதனை யழகுறப் போர்த்தவன்முத்தியாய் மூவரின் முதல்வனாய் நின்றவன்பத்தியாற் பாடிடப் பரிந்தவர்க் கருள்செயும்அத்தனார் உறைவிடம் அணிமழ பாடியே.
சொற்பிரிப்பு
அத்தியின் உரிதனை அழகு உறப் போர்த்தவன்;முத்தி ஆய் மூவரில் முதல்வனாய் நின்றவன்;பத்தியால் பாடிட, பரிந்து அவர்க்கு அருள்செயும்அத்தனார்; உறைவு இடம் அணி மழபாடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கங்கையார் சடையிடைக் கதிர்மதி யணிந்தவன்வெங்கண்வா ளரவுடை வேதியன் தீதிலாச்செங்கயற் கண்ணுமை யாளொடுஞ் சேர்விடம்மங்கைமார் நடம்பயில் மாமழ பாடியே.
சொற்பிரிப்பு
கங்கை ஆர் சடை இடைக் கதிர் மதி அணிந்தவன்,வெங் கண் வாள் அரவு உடை வேதியன், தீது இலாச்செங்கயல் கண் உமை யாளொடும் சேர்வு இடம்மங்கைமார் நடம் பயில் மா மழபாடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பாலனா ராருயிர் பாங்கினால் உணவருங்காலனார் உயிர்செகக் காலினாற் சாடினான்சேலினார் கண்ணினாள் தன்னொடுஞ் சேர்விடம்மாலினார் வழிபடு மாமழ பாடியே.
சொற்பிரிப்பு
பாலனார் ஆர் உயிர் பாங்கினால் உண வரும்காலனார் உயிர் செகக் காலினால் சாடினான்,சேலின் ஆர் கண்ணினாள் தன்னொடும் சேர்வு இடம்மாலினார் வழிபடும் மா மழபாடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

விண்ணிலார் இமையவர் மெய்ம்மகிழ்ந் தேத்தவேஎண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார்கண்ணினாற் காமனைக் கனலெழக் காய்ந்தஎம்அண்ணலார் உறைவிடம் அணிமழ பாடியே.
சொற்பிரிப்பு
விண்ணில் ஆர் இமையவர் மெய்ம் மகிழ்ந்து ஏத்தவே,எண் இலார் முப்புரம் எரியுண, நகைசெய்தார்கண்ணினால் காமனைக் கனல் எழக் காய்ந்த எம்அண்ணலார்; உறைவு இடம் அணி மழபாடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கரத்தினாற் கயிலையை எடுத்தகார் அரக்கனசிரத்தினை யூன்றலுஞ் சிவனடி சரண்எனாஇரத்தினாற் கைந்நரம் பெடுத்திசை பாடலும்வரத்தினான் மருவிடம் மாமழ பாடியே.
சொற்பிரிப்பு
கரத்தினால் கயிலையை எடுத்த கார் அரக்கனசிரத்தினை ஊன்றலும், சிவன் அடி சரண் எனா,இரத்தினால் கைந்நரம்பு எடுத்து இசை பாடலும்,வரத்தினான் மருவு இடம் மா மழபாடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஏடுலா மலர்மிசை அயனெழில் மாலுமாய்நாடினார்க் கரியசீர் நாதனார் உறைவிடம்பாடெலாம் பெண்ணையின் பழம்விழப் பைம்பொழில்மாடெலாம் மல்குசீர் மாமழ பாடியே.
சொற்பிரிப்பு
ஏடு உலாம் மலர்மிசை அயன், எழில் மாலும் ஆய்,நாடினார்க்கு அரிய சீர் நாதனார் உறைவு இடம்பாடு எலாம் பெண்ணையின் பழம் விழ, பைம்பொழில்மாடு எலாம் மல்கு சீர் மா மழபாடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

உறிபிடித் தூத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்நெறிபிடித் தறிவிலா நீசர்சொற் கொள்ளன்மின்பொறிபிடித் தரவினம் பூணெனக் கொண்டுமான்மறிபிடித் தானிடம் மாமழ பாடியே.
சொற்பிரிப்பு
உறி பிடித்து ஊத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்நெறி பிடித்து, அறிவு இலா நீசர் சொல் கொள்ளன்மின்!பொறி பிடித்த(அ)ரவு இனம் பூண் எனக் கொண்டு, மாந்மறி பிடித்தான் இடம் மா மழபாடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

ஞாலத்தார் ஆதிரை நாளினான் நாடொறுஞ்சீலத்தான் மேவிய திருமழ பாடியைஞாலத்தான் மிக்கசீர் ஞானசம் பந்தன்சொல்கோலத்தாற் பாடுவார் குற்றமற் றார்களே.
சொற்பிரிப்பு
ஞாலத்து ஆர் ஆதிரை நாளினான், நாள்தொறும்சீலத்தான், மேவிய திரு மழபாடியைஞாலத்தால் மிக்க சீர் ஞானசம்பந்தன் சொல்கோலத்தால் பாடுவார் குற்றம் அற்றார்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.