1
படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரைஉடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்சடையினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.
சொற்பிரிப்பு
படையினார், வெண்மழு;பாய் புலித்தோல் அரைஉடையினார்; உமை ஒருகூறனார்; ஊர்வது ஓர்விடையினார்; வெண்பொடிப்பூசியார்; விரிபுனல்சடையினார்; உறைவு இடம்சக்கரப்பள்ளியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.