திருமுறை 3 · 3.026 · 11

திருக்கானப்பேர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
கொல்லி
தலம்
கானப்பேர்
நாடு
பாண்டியநாடு

1

பிடியெலாம் பின்செலப் பெருங்கைமா மலர்தழீஇவிடியலே தடமூழ்கி விதியினால் வழிபடுங்கடியுலாம் பூம்பொழிற் கானப்பேர் அண்ணல்நின்அடியலால் அடைசரண் உடையரோ அடியரே.
சொற்பிரிப்பு
பிடி எலாம் பின் செல, பெருங்கை மா மலர் தழீஇ,விடியலே தடம் மூழ்கி, விதியினால் வழிபடும்கடி உலாம் பூம்பொழில் கானப்பேர் அண்ணல்! நின்அடி அலால் அடை சரண் உடையரோ, அடியரே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நுண்ணிடைப் பேரல்குல் நூபுரம் மெல்லடிப்பெண்ணின்நல் லாளையோர் பாகமாப் பேணினான்கண்ணுடை நெற்றியான் கருதிய கானப்பேர்விண்ணிடை வேட்கையார் விரும்புதல் கருமமே.
சொற்பிரிப்பு
நுண் இடைப் பேர் அல்குல் நூபுர மெல் அடிப்பெண்ணின் நல்லாளை ஓர் பாகமாப் பேணினான்,கண் உடை நெற்றியான், கருதிய கானப்பேர்விண் இடை வேட்கையார் விரும்புதல் கருமமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டினங்காவிவாய்ப் பண்செயுங் கானப்பேர் அண்ணலைநாவிவாய்ச் சாந்துளும் பூவுளும் ஞானநீர்தூவிவாய்ப் பெய்துநின் றாட்டுவார் தொண்டரே.
சொற்பிரிப்பு
வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டு இனம்காவிவாய்ப் பண் செயும் கானப்பேர் அண்ணலை,நாவிவாய்ச் சாந்துளும் பூவுளும் ஞானநீர்தூவி, வாய்ப் பெய்து நின்று ஆட்டுவார், தொண்டரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நிறையுடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும்பறையுடை முழவுளும் பலியுளும் பாட்டுளுங்கறையுடை மிடற்றண்ணல் கருதிய கானப்பேர்குறையுடை யவர்க்கலாற் களைகிலார் குற்றமே.
சொற்பிரிப்பு
நிறை உடை நெஞ்சுளும், நீருளும், பூவுளும்,பறை உடை முழவுளும், பலியுளும், பாட்டுளும்,கறை உடை மிடற்று அண்ணல் கருதிய கானப்பேர்குறை உடையவர்க்கு அலால், களைகிலார், குற்றமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஏனப்பூண் மார்பின்மேல் என்புபூண் டீறிலாஞானப்பே ராயிரம் பேரினான் நண்ணியகானப்பே ரூர்தொழுங் காதலார் தீதிலர்வானப்பே ரூர்புகும் வண்ணமும் வல்லரே.
சொற்பிரிப்பு
ஏனப் பூண் மார்பின்மேல் என்பு பூண்டு, ஈறு இலாஞானப் பேர் ஆயிரம் பேரினான், நண்ணியகானப்பேர் ஊர் தொழும் காதலார் தீது இலர்வானப் பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பள்ளமே படர்சடைப் பாற்படப் பாய்ந்தநீர்வெள்ளமே தாங்கினான் வெண்மதி சூடினான்கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்உள்ளமே கோயிலா உள்குமென் னுள்ளமே.
சொற்பிரிப்பு
பள்ளமே படர்சடைப் பால் படப் பாய்ந்த நீர்வெள்ளமே தாங்கினான், வெண்மதி சூடினான்-கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்உள்ளமே கோயிலா உள்கும், என் உள்ளமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக்கானமார் கடகரி வழிபடுங் கானப்பேர்ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணின்ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே.
சொற்பிரிப்பு
மான மா மடப்பிடி வன் கையால் அலகு இடக்கானம் ஆர் கடகரி வழிபடும் கானப்பேர்,ஊனம் ஆம் உடம்பினில் உறு பிணி கெட எணின்,ஞானம் ஆம் மலர்கொடு நணுகுதல் நன்மையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வாளினான் வேலினான் மால்வரை யெடுத்ததிண்டோ ளினான் நெடுமுடி தொலையவே யூன்றியதாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார்நாளும்நாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே.
சொற்பிரிப்பு
வாளினான், வேலினான், மால்வரை எடுத்த திண்-தோளினான், நெடு முடி தொலையவே ஊன்றியதாளினான், கானப்பேர் தலையினால் வணங்குவார்நாளும் நாள் உயர்வது ஓர் நன்மையைப் பெறுவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

சிலையினால் முப்புரந் தீயெழச் செற்றவன்நிலையிலா இருவரை நிலைமைகண் டோ ங்கினான்கலையினார் புறவில்தேன் கமழ்தரு கானப்பேர்தலையினால் வணங்குவார் தவமுடை யார்களே.
சொற்பிரிப்பு
சிலையினால் முப்புரம் தீ எழச் செற்றவன்,நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான்,கலையின் ஆர் புறவில்—தேன் கமழ் தரு கானப்பேர்தலையினால் வணங்குவார் தவம் உடையார்களே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்துச்சிபறித்தலும் போர்த்தலும் பயனிலை பாவிகாள்மறித்தலை மடப்பிடி வளரிளங் கொழுங்கொடிகறித்தெழு கானப்பேர் கைதொழல் கருமமே.
சொற்பிரிப்பு
உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்து, உச்சிபறித்தலும் போர்த்தலும் பயன் இலை, பாவிகாள்மறித் தலை மடப்பிடி வளர் இளங் கொழுங் கொடிகறித்து, எழு கானப்பேர் கைதொழல் கருமமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

காட்டகத் தாடலான் கருதிய கானப்பேர்கோட்டகத் திளவரால் குதிகொளுங் காழியான்நாட்டகத் தோங்குசீர் ஞானசம் பந்தனபாட்டகத் திவைவலார்க் கில்லையாம் பாவமே.
சொற்பிரிப்பு
காட்டு அகத்து ஆடலான் கருதிய கானப்பேர்கோட்டகத்து இள வரால் குதிகொளும் காழியான்-நாட்டு அகத்து ஓங்கு சீர் ஞானசம்பந்தன்பாட்டு அகத்து இவை வலார்க்கு இல்லைஆம்,பாவமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.