திருமுறை 3 · 3.025 · 11

திருந்துதேவன்குடி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
கொல்லி
தலம்
திருந்துதேவன்குடி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

மருந்துவேண் டில்லிவை மந்திரங் கள்ளிவைபுரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்ளிவைதிருந்துதே வன்குடித் தேவர்தே வெய்தியஅருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே.
சொற்பிரிப்பு
மருந்து, வேண்டில் இவை; மந்திரங்கள் இவை;புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவைதிருந்து தேவன் குடித் தேவர் தேவு, எய்தியஅருந்தவத்தோர் தொழும் அடிகள், வேடங்களே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வீதிபோக் காவன வினையைவீட் டுவ்வனஓதியோர்க் கப்படாப் பொருளையோர் விப்பனதீதில்தே வன்குடித் தேவர்தே வெய்தியஆதியந் தம்மிலா அடிகள்வே டங்களே.
சொற்பிரிப்பு
வீதிபோக்கு ஆவன; வினையை வீட்டு(வ்)வன;ஓதி ஓர்க்கப்படாப் பொருளை ஓர்விப்பனதீது இல் தேவன்குடித் தேவர் தேவு, எய்தியஆதி அந்தம் இலா அடிகள், வேடங்களே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மானமாக் குவ்வன மாசுநீக் குவ்வனவானையுள் கச்செலும் வழிகள்காட் டுவ்வனதேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடிஆனஞ்சா டும்முடி யடிகள்வே டங்களே.
சொற்பிரிப்பு
மானம் ஆக்கு(வ்)வன, மாசு நீக்கு(வ்)வன;வானை உள்கச் செலும் வழிகள் காட்டு(வ்)வனதேனும் வண்டும் இசை பாடும் தேவன்குடிஆன் அஞ்சு ஆடும் முடி அடிகள் வேடங்களே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

செவிகளார் விப்பன சிந்தையுட் சேர்வனகவிகள்பா டுவ்வன கண்குளிர் விப்பனபுவிகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடிஅவிகளுய்க் கப்படும் அடிகள்வே டங்களே.
சொற்பிரிப்பு
செவிகள் ஆர்விப்பன; சிந்தையுள் சேர்வன;கவிகள் பாடு(வ்)வன; கண் குளிர்விப்பனபுவிகள் பொங்கப் புனல் பாயும் தேவன்குடிஅவிகள் உய்க்கப்படும் அடிகள் வேடங்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

விண்ணுலா வுந்நெறி வீடுகாட் டுந்நெறிமண்ணுலா வுந்நெறி மயக்கந்தீர்க் குந்நெறிதெண்ணிலா வெண்மதி தீண்டுதே வன்குடிஅண்ணலான் ஏறுடை யடிகள்வே டங்களே.
சொற்பிரிப்பு
விண் உலாவும் நெறி; வீடு காட்டும் நெறி;மண் உலாவும் நெறி; மயக்கம் தீர்க்கும் நெறிதெண் நிலா வெண்மதி தீண்டு தேவன்குடிஅண்ணல், ஆன் ஏறு உடை அடிகள், வேடங்களே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பங்கமென் னப்படர் பழிகளென் னப்படாபுங்கமென் னப்படர் புகழ்களென் னப்படுந்திங்கள்தோ யும்பொழில் தீண்டுதே வன்குடிஅங்கமா றுஞ்சொன்ன அடிகள்வே டங்களே.
சொற்பிரிப்பு
பங்கம் என்னப் படர் பழிகள் என்னப்படா,புங்கம் என்னப் படர் புகழ்கள் என்னப்படும்திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன்குஅங்கம் ஆறும் சொன்ன அடிகள் வேடங்களே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கரைதலொன் றும்மிலை கருதவல் லார்தமக்குரையிலூ னம்மிலை உலகினின் மன்னுவர்திரைகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடிஅரையில்வெண் கோவணத் தடிகள்வே டங்களே.
சொற்பிரிப்பு
கரைதல் ஒன்றும்(ம்) இலை, கருத வல்லார்தமக்குஉரைவில் ஊனம்(ம்) இலை; உலகினில் மன்னுவர்திரைகள் பொங்கப் புனல் பாயும் தேவன்குடிஅரையில் வெண் கோவணத்து அடிகள் வேடங்களே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

உலகமுட் குந்திறல் லுடையரக் கன்வலிவிலகுபூ தக்கணம் வெருட்டும்வே டத்தினதிலகமா ரும்பொழில் சூழ்ந்ததே வன்குடிஅலர்தயங் கும்முடி யடிகள்வே டங்களே.
சொற்பிரிப்பு
உலகம் உட்கும் திறல் உடை அரக்கன் வலிவிலகு பூதக்கணம் வெருட்டும் வேடத்தினதிலகம் ஆரும் பொழில் சூழ்ந்த தேவன்குடிஅலர் தயங்கும் முடி அடிகள் வேடங்களே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

துளக்கமில் லாதன தூயதோற் றத்தனவிளக்கமாக் குவ்வன வெறிவண்டா ரும்பொழில்திளைக்குந்தே வன்குடித் திசைமுக னோடுமால்அளக்கவொண் ணாவண்ணத் தடிகள்வே டங்களே.
சொற்பிரிப்பு
துளக்கம் இல்லாதன; தூய தோற்றத்தன;விளக்கம் ஆக்கு(வ்)வன வெறி வண்டு ஆரும் பொழில்திளைக்கும் தேவன்குடி, திசைமுகனோடு மால்அளக்க ஒண்ணா வண்ணத்து அடிகள் வேடங்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

செருமரு தண்துவர்த் தேரமண் ஆதர்கள்உருமரு வப்படாத் தொழும்பர்தம் உரைகொளேல்திருமரு வும்பொய்கை சூழ்ந்ததே வன்குடிஅருமருந் தாவன அடிகள்வே டங்களே.
சொற்பிரிப்பு
செரு மருதம் துவர்த் தேர், அமண் ஆதர்கள்உரு மருவப்படாத் தொழும்பர் தம் உரை கொளேல்!திரு மருவும் பொய்கை சூழ்ந்த தேவன்குடிஅருமருந்து ஆவன, அடிகள் வேடங்களே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

சேடர்தே வன்குடித் தேவர்தே வன்றனைமாடமோங் கும்பொழில் மல்குதண் காழியான்நாடவல் லதமிழ் ஞானசம் பந்தனபாடல்பத் தும்வல்லார்க் கில்லையாம் பாவமே.
சொற்பிரிப்பு
சேடர் தேவன்குடித் தேவர் தேவன்தனை,மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான்-நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தனபாடல் பத்தும் வல்லார்க்கு இல்லையாம், பாவமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.