1
உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான்வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கியசெருவினான் உறைவிடந் திருவிற் கோலமே.
சொற்பிரிப்பு
"உருவின் ஆர் உமையொடும் ஒன்றி நின்றது ஓர்திருவினான்; வளர்சடைத் திங்கள் கங்கையான்;வெருவி வானவர் தொழ, வெகுண்டு நோக்கியசெருவினான்; உறைவு இடம் திரு விற்கோலமே."
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.