திருமுறை 3 · 3.022 · 11

திருப்பஞ்சாக்கரப்பதிகம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரபஞ்சமம்
தலம்
பொது
நாடு
பொது

1

துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும்நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற்றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.
சொற்பிரிப்பு
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்,நெஞ்சு அகம் நைந்து, நினைமின், நாள்தொறும்,வஞ்சகம் அற்று! அடி வாழ்த்த, வந்த கூற்றுஅஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மந்திர நான்மறை யாகி வானவர்சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வனசெந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.
சொற்பிரிப்பு
"மந்திர நால்மறை ஆகி, வானவர்சிந்தையுள் நின்று, அவர் தம்மை ஆள்வனசெந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்குஅந்தியுள் மந்திரம், அஞ்சு எழுத்துமே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஊனிலு யிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்ஞானவி ளக்கினை யேற்றி நன்புலத்தேனைவ ழிதிறந் தேத்து வார்க்கிடர்ஆனகெ டுப்பன அஞ்செ ழுத்துமே.
சொற்பிரிப்பு
"ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண் சுடர்ஞானவிளக்கினை ஏற்றி, நன் புலத்துஏனை வழி திறந்து, ஏத்துவார்க்கு இடர்ஆன கெடுப்பன அஞ்சு எழுத்துமே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நல்லவர் தீயரெ னாது நச்சினர்செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவகொல்லந மன்தமர் கொண்டு போமிடத்தல்லல்கெ டுப்பன அஞ்செ ழுத்துமே.
சொற்பிரிப்பு
"நல்லவர் தீயவர் எனாது, நச்சினர்செல்லல் கெட, சிவமுத்தி காட்டுவ;கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்துஅல்லல் கெடுப்பன அஞ்சு எழுத்துமே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத்தங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில்தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடைஅங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.
சொற்பிரிப்பு
கொங்கு அலர் மன்மதன் வாளி ஐந்து; அகத்துஅங்கு உள பூதமும் அஞ்ச; ஐம் பொழில்;தங்கு அரவின் படம் அஞ்சும்; தம் உடைஅம் கையில் ஐ விரல்; அஞ்சு, எழுத்துமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.
சொற்பிரிப்பு
"தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்,வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்,இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்,அம்மையினும், துணை அஞ்சு எழுத்துமே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்பீடை கெடுப்பன பின்னை நாடொறும்மாடு கொடுப்பன மன்னு மாநடம்ஆடி யுகப்பன அஞ்செ ழுத்துமே.
சொற்பிரிப்பு
"வீடு பிறப்பை அறுத்து, மெச்சினர்பீடை கெடுப்பன; பின்னை, நாள்தொறும்மாடு கொடுப்பன; மன்னு மா நடம்ஆடி உகப்பன அஞ்சு எழுத்துமே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வண்டம ரோதி மடந்தை பேணினபண்டையி ராவணன் பாடி யுய்ந்தனதொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.
சொற்பிரிப்பு
"வண்டு அமர் ஓதி மடந்தை பேணின;பண்டை இராவணன் பாடி உய்ந்தன;தொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்குஅண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும்பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கார்வண மாவன அஞ்செ ழுத்துமே.
சொற்பிரிப்பு
"கார்வணன், நான்முகன், காணுதற்கு ஒணாச்சீர் வணச் சேவடி செவ்வி, நாள்தொறும்,பேர் வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்குஆர் வணம் ஆவன அஞ்சு எழுத்துமே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்சித்தத் தவர்கள் தெளிந்து தேறினவித்தக நீறணி வார்வி னைப்பகைக்கத்திர மாவன அஞ்செ ழுத்துமே.
சொற்பிரிப்பு
"புத்தர், சமண் கழுக் கையர், பொய் கொளாச்சித்தத்தவர்கள் தெளிந்து தேறின;வித்தக நீறு அணிவார் வினைப்பகைக்குஅத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறைகற்றவன் காழியர் மன்னன் உன்னியஅற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்துற்றன வல்லவர் உம்ப ராவரே.
சொற்பிரிப்பு
"நல்—தமிழ் ஞானசம்பந்தன்— நால்மறைகற்றவன், காழியர் மன்னன்—உன்னியஅற்றம் இல் மாலைஈர் ஐந்தும், அஞ்சு எழுத்துஉற்றன, வல்லவர் உம்பர் ஆவரே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.