திருமுறை 3 · 3.021 · 11

திருக்கருக்குடி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரபஞ்சமம்
தலம்
கருக்குடி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

நனவிலுங் கனவிலும் நாளுந் தன்னொளிநினைவிலும் எனக்குவந் தெய்தும் நின்மலன்கனைகடல் வையகந் தொழு கருக்குடிஅனலெரி யாடுமெம் மடிகள் காண்மினே.
சொற்பிரிப்பு
"நனவிலும் கனவிலும், நாளும், தன் ஒளிநினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன்-கனைகடல் வையகம் தொழு கருக்குடிஅனல்—எரி ஆடும் எம் அடிகள்; காண்மினே!"
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வேதியன் விடையுடை விமலன் ஒன்னலர்மூதெயில் எரியெழ முனிந்த முக்கணன்காதியல் குழையினன் கருக்கு டியமர்ஆதியை அடிதொழ அல்லல் இல்லையே.
சொற்பிரிப்பு
"வேதியன், விடை உடை விமலன், ஒன்னலர்மூதெயில் எரி எழ முனிந்த முக்கணன்,காது இயல் குழையினன், கருக்குடி அமர்ஆதியை, அடி தொழ அல்லல் இல்லையே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மஞ்சுறு பொழில்வளம் மலி கருக்குடிநஞ்சுறு திருமிட றுடைய நாதனார்அஞ்சுரும் பார்குழல் அரிவை யஞ்சவேவெஞ்சுரந் தனில்விளை யாட லென்கொலோ.
சொற்பிரிப்பு
"மஞ்சு உறு பொழில் வளம் மலி கருக்குநஞ்சு உறு திருமிடறு உடைய நாதனார்அம் சுரும்பு ஆர் குழல் அரிவை அஞ்சவே,வெஞ்சுரம் தனில் விளையாடல் என்கொலோ?"
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஊனுடைப் பிறவியை அறுக்க வுன்னுவீர்கானிடை யாடலான் பயில் கருக்குடிக்கோனுயர் கோயிலை வணங்கி வைகலும்வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே.
சொற்பிரிப்பு
"ஊன் உடைப் பிறவியை அறுக்க உன்னுவீர்கான் இடை ஆடலான் பயில் கருக்குடிக்கோன் உயர் கோயிலை வணங்கி, வைகலும்,வானவர் தொழு கழல் வாழ்த்தி, வாழ்மினே!"
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

சூடுவர் சடையிடைக் கங்கை நங்கையைக்கூடுவ ருலகிடை யையங் கொண்டொலிபாடுவ ரிசைபறை கொட்ட நட்டிருள்ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே.
சொற்பிரிப்பு
"சூடுவர், சடை இடைக் கங்கை நங்கையை;கூடுவர், உலகு இடை ஐயம் கொண்டு; ஒலிபாடுவர், இசை; பறை கொட்ட, நட்டிருள்ஆடுவர்; கருக்குடி அண்ணல் வண்ணமே!"
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

இன்புடை யாரிசை வீணை பூணராஎன்புடை யாரெழில் மேனி மேலெரிமுன்புடை யார்முத லேத்தும் அன்பருக்கன்புடை யார்கருக் குடியெம் மண்ணலே.
சொற்பிரிப்பு
"இன்பு உடையார், இசை வீணை; பூண் அரா,என்பு, உடையார்; எழில் மேனிமேல் எரிமுன்பு உடையார்; முதல் ஏத்தும் அன்பருக்குஅன்பு உடையார் கருக்குடி எம் அண்ணலே!"
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

காலமும் ஞாயிறுந் தீயு மாயவர்கோலமும் முடியர வணிந்த கொள்கையர்சீலமும் உடையவர் திருக் கருக்குடிச்சாலவும் இனிதவ ருடைய தன்மையே.
சொற்பிரிப்பு
"காலமும் ஞாயிறும் தீயும் ஆயவர்கோலமும் முடி அரவு அணிந்த கொள்கையர்;சீலமும் உடையவர்; திருக்கருக்குடிச்சாலவும் இனிது, அவர் உடைய தன்மையே!"
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

எறிகடல் புடைதழு விலங்கை மன்னனைமுறிபட வரையிடை யடர்த்த மூர்த்தியார்கறைபடு பொழில்மதி தவழ் கருக்குடிஅறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே.
சொற்பிரிப்பு
"எறிகடல் புடை தழுவு இலங்கை மன்னனைமுறிபட வரை இடை அடர்த்த மூர்த்தியார்கறை படு பொழில் மதி தவழ், கருக்குடிஅறிவொடு தொழுமவர் ஆள்வர், நன்மையே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பூமனுந் திசைமுகன் தானும் பொற்பமர்வாமனன் அறிகிலா வண்ண மோங்கெரிஆமென வுயர்ந்தவன் அணி கருக்குடிநாமன னினில்வர நினைதல் நன்மையே.
சொற்பிரிப்பு
"பூ மனும் திசை முகன் தானும், பொற்பு அமர்வாமனன், அறிகிலா வண்ணம் ஓங்கு எரி-ஆம் என உயர்ந்தவன் அணி கருக்குடிநா மனனினில் வர நினைதல் நன்மையே"
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

சாக்கியர் சமண்படு கையர் பொய்ம்மொழிஆக்கிய வுரைகொளேல் அருந் திருந்நமக்காக்கிய அரனுறை யணிக ருக்குடிப்பூக்கமழ் கோயிலே புடைபட் டுய்ம்மினே.
சொற்பிரிப்பு
"சாக்கியர், சமண் படு கையர், பொய்ம்மொழிஆக்கிய உரை கொளேல்! அருந் திரு(ந்) நமக்குஆக்கிய அரன் உறை அணி கருக்குடிப்பூக் கமழ் கோயிலே புடைபட்டு உய்ம்மினே!"
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

கானலில் விரைமலர் விம்மு காழியான்வானவன் கருக்குடி மைந்தன் தன்னொளிஆனமெய்ஞ் ஞானசம் பந்தன் சொல்லியஊனமில் மொழிவலார்க் குயரும் இன்பமே.
சொற்பிரிப்பு
"கானலில் விரைமலர் விம்மு காழியான்,வானவன் கருக்குடி மைந்தன் தன் ஒளிஆன, மெய்ஞ் ஞானசம்பந்தன், சொல்லியஊனம் இல் மொழி வலார்க்கு உயரும், இன்பமே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.