திருமுறை 3 · 3.020 · 11

திருப்பூவணம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரபஞ்சமம்
தலம்
பூவணம்
நாடு
பாண்டியநாடு

1

மாதமர் மேனிய னாகி வண்டொடுபோதமர் பொழிலணி பூவ ணத்துறைவேதனை விரவலர் அரணம் மூன்றெய்தநாதனை யடிதொழ நன்மை யாகுமே.
சொற்பிரிப்பு
"மாது அமர் மேனியன் ஆகி, வண்டொடுபோது அமர் பொழில் அணி பூவணத்து உறைவேதனை, விரவலர் அரணம் மூன்று எய்தநாதனை, அடி தொழ, நன்மை ஆகுமே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வானணி மதிபுல்கு சென்னி வண்டொடுதேனணி பொழில்திருப் பூவ ணத்துறைஆனநல் லருமறை யங்கம் ஓதியஞானனை யடிதொழ நன்மை யாகுமே.
சொற்பிரிப்பு
"வான் அணி மதி புல்கு சென்னி, வண்டொடுதேன் அணி பொழில்— திருப் பூவணத்து உறை,ஆன நல் அருமறை அங்கம் ஓதிய,ஞானனை அடி தொழ, நன்மை ஆகுமே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

வெந்துய ருறுபிணி வினைகள் தீர்வதோர்புந்தியர் தொழுதெழு பூவ ணத்துறைஅந்திவெண் பிறையினோ டாறு சூடியநந்தியை யடிதொழ நன்மை யாகுமே.
சொற்பிரிப்பு
"வெந்துயர், உறு பிணி, வினைகள், தீர்வது ஓர்புந்தியர் தொழுது எழு பூவணத்து உறை,அந்தி வெண்பிறையினோடு ஆறு சூடிய,நந்தியை அடி தொழ, நன்மை ஆகுமே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

வாசநன் மலர்மலி மார்பில் வெண்பொடிப்பூசனைப் பொழில்திகழ் பூவ ணத்துறைஈசனை மலர்புனைந் தேத்து வார்வினைநாசனை யடிதொழ நன்மை யாகுமே.
சொற்பிரிப்பு
"வாச நல் மலர் மலி மார்பில் வெண்பொடிப்பூசனை, பொழில் திகழ் பூவணத்து உறைஈசனை, மலர் புனைந்து ஏத்துவார் வினைநாசனை, அடி தொழ, நன்மை ஆகுமே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகைபொருந்திய பொழில்திருப் பூவ ணத்துறைஅருந்திறல் அவுணர்தம் அரணம் மூன்றெய்தபெருந்தகை யடிதொழப் பீடை யில்லையே.
சொற்பிரிப்பு
"குருந்தொடு, மாதவி, கோங்கு, மல்லிகை,பொருந்திய பொழில்— திருப் பூவணத்து உறை,அருந் திறல் அவுணர்தம் அரணம் மூன்று எய்த,பெருந்தகை அடி தொழ, பீடை இல்லையே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

வெறிகமழ் புன்னைபொன் ஞாழல் விம்மியபொறியர வணிபொழிற் பூவ ணத்துறைகிறிபடு முடையினன் கேடில் கொள்கையன்நறுமலர் அடிதொழ நன்மை யாகுமே.
சொற்பிரிப்பு
"வெறி கமழ் புன்னை, பொன்ஞாழல், விம்மியபொறி அரவு அணி பொழில் பூவணத்து உறைகிறிபடும் உடையினன், கேடு இல் கொள்கையன்,நறு மலர் அடி தொழ, நன்மை ஆகுமே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பறைமல்கு முழவொடு பாடல் ஆடலன்பொறைமல்கு பொழிலணி பூவ ணத்துறைமறைமல்கு பாடலன் மாதோர் கூறினன்அறைமல்கு கழல்தொழ அல்லல் இல்லையே.
சொற்பிரிப்பு
"பறை மல்கு முழவொடு பாடல் ஆடலன்,பொறை மல்கு பொழில் அணி பூவணத்து உறைமறை மல்கு பாடலன், மாது ஒர் கூறினன்,அறை மல்கு கழல் தொழ, அல்லல் இல்லையே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வரைதனை யெடுத்தவல் லரக்கன் நீள்முடிவிரல்தனில் அடர்த்தவன் வெள்ளை நீற்றினன்பொருபுனல் புடையணி பூவ ணந்தனைப்பரவிய அடியவர்க் கில்லை பாவமே.
சொற்பிரிப்பு
"வரை தனை எடுத்த வல் அரக்கன் நீள்முடிவிரல்தனில் அடர்த்தவன், வெள்ளை நீற்றினன்,பொரு புனல் புடை அணி பூவணம் தனைப்பரவிய அடியவர்க்கு இல்லை, பாவமே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நீர்மல்கு மலருறை வானும் மாலுமாய்ச்சீர்மல்கு திருந்தடி சேர கிற்கிலர்போர்மல்கு மழுவினன் மேய பூவணம்ஏர்மல்கு மலர்புனைந் தேத்தல் இன்பமே.
சொற்பிரிப்பு
"நீர் மல்கு மலர் உறைவானும், மாலும் ஆய்,சீர் மல்கு திருந்து அடிசேரகிற்கிலர்;போர் மல்கு மழுவினன் மேய பூவணம்,ஏர் மல்கு மலர் புனைந்து, ஏத்தல் இன்பமே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மண்டைகொண் டுழிதரு மதியில் தேரருங்குண்டருங் குணமல பேசுங் கோலத்தர்வண்டமர் வளர்பொழில் மல்கு பூவணங்கண்டவர் அடிதொழு தேத்தல் கன்மமே.
சொற்பிரிப்பு
"மண்டை கொண்டு உழிதரு மதி இல் தேரரும்,குண்டரும், குணம் அல பேசும் கோலத்தர்;வண்டு அமர் வளர் பொழில் மல்கு பூவணம்கண்டவர் அடி தொழுது ஏத்தல் கன்மமே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

புண்ணியர் தொழுதெழு பூவ ணத்துறைஅண்ணலை யடிதொழு தந்தண் காழியுள்நண்ணிய அருமறை ஞான சம்பந்தன்பண்ணிய தமிழ்சொலப் பறையும் பாவமே.
சொற்பிரிப்பு
"புண்ணியர் தொழுது எழு பூவணத்து உறைஅண்ணலை அடி தொழுது, அம் தண் காழியுள்நண்ணிய அருமறை ஞானசம்பந்தன்பண்ணிய தமிழ் சொல, பறையும், பாவமே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.