திருமுறை 3 · 3.019 · 11

திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரபஞ்சமம்
தலம்
அம்பர்ப்பெருந்திருக்கோயில்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

எரிதர அனல்கையில் ஏந்தி எல்லியில்நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர்அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே.
சொற்பிரிப்பு
"எரிதர அனல் கையில் ஏந்தி, எல்லியில்,நரி திரி கான் இடை, நட்டம் ஆடுவர்அரிசில் அம் பொரு புனல் அம்பர் மா நகர்குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மையகண் மலைமகள் பாக மாயிருள்கையதோர் கனலெரி கனல ஆடுவர்ஐயநன் பொருபுனல் அம்பர்ச் செம்பியர்செய்யகண் ணிறைசெய்த கோயில் சேர்வரே.
சொற்பிரிப்பு
"மைய கண் மலைமகள் பாகம் ஆய், இருளகையது ஓர் கனல்—எரி கனல ஆடுவர்ஐய நன் பொரு புனல் அம்பர், செம்பியர்செய்யகண் இறை செய்த கோயில் சேர்வரே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மறைபுனை பாடலர் சுடர்கை மல்கவோர்பிறைபுனை சடைமுடி பெயர ஆடுவர்அறைபுனல் நிறைவயல் அம்பர் மாநகர்இறைபுனை யெழில்வளர் இடம தென்பரே.
சொற்பிரிப்பு
"மறை புனை பாடலர், சுடர் கை மல்க, ஓர்பிறை புனை சடைமுடி பெயர, ஆடுவர்அறை புனல் நிறை வயல் அம்பர் மா நகர்இறை புனை எழில் வளர் இடம் அது என்பரே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

இரவுமல் கிளமதி சூடி யீடுயர்பரவமல் கருமறை பாடி யாடுவர்அரவமோ டுயர்செம்மல் அம்பர்க் கொம்பலர்மரவமல் கெழில்நகர் மருவி வாழ்வரே.
சொற்பிரிப்பு
"இரவு மல்கு இளமதி சூடி, ஈடு உயர்பரவ மல்கு அருமறை பாடி, ஆடுவர்அரவமோடு உயர் செம்மல் அம்பர், கொம்பு அலர்மரவம் மல்கு எழில் நகர், மருவி வாழ்வரே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

சங்கணி குழையினர் சாமம் பாடுவர்வெங்கனல் கனல்தர வீசி யாடுவர்அங்கணி விழவமர் அம்பர் மாநகர்ச்செங்கண்நல் இறைசெய்த கோயில் சேர்வரே
சொற்பிரிப்பு
"சங்கு அணி குழையினர், சாமம் பாடுவர்வெங்கனல் கனல்தர வீசி ஆடுவர்அங்கு அணி விழவு அமர் அம்பர் மா நகர்செங்கண் நல் இறை செய்த கோயில் சேர்வரே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கழல்வளர் காலினர் சுடர்கை மல்கவோர்சுழல்வளர் குளிர்புனல் சூடி யாடுவர்அழல்வளர் மறையவர் அம்பர்ப் பைம்பொழில்நிழல்வளர் நெடுநகர் இடம தென்பரே.
சொற்பிரிப்பு
"கழல் வளர் காலினர், சுடர் கை மல்க, ஓர்சுழல் வளர் குளிர்புனல் சூடி, ஆடுவர்அழல் வளர் மறையவர் அம்பர், பைம்பொழில்நிழல் வளர் நெடு நகர், இடம் அது என்பரே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

இகலுறு சுடரெரி இலங்க வீசியேபகலிடம் பலிகொளப் பாடி யாடுவர்அகலிடம் மலிபுகழ் அம்பர் வம்பவிழ்புகலிடம் நெடுநகர் புகுவர் போலுமே
சொற்பிரிப்பு
"இகல் உறு சுடர் எரி இலங்க வீசியே,பகல் இடம் பலி கொளப் பாடி ஆடுவர்அகலிடம் மலி புகழ் அம்பர், வம்பு அவிழ்புகல் இடம் நெடு நகர் புகுவர்போலுமே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

எரியன மணிமுடி இலங்கைக் கோன்றனகரியன தடக்கைகள் அடர்த்த காலினர்அரியவர் வளநகர் அம்பர் இன்பொடுபுரியவர் பிரிவிலாப் பூதஞ் சூழவே.
சொற்பிரிப்பு
"எரி அன மணி முடி இலங்கைக்கோன் தனகரி அன தடக்கைகள் அடர்த்த காலினர்,அரியவர் வள நகர் அம்பர் இன்பொடுபுரியவர், பிரிவு இலாப் பூதம் சூழவே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வெறிகிளர் மலர்மிசை யவனும் வெந்தொழிற்பொறிகிளர் அரவணைப் புல்கு செல்வனும்அறிகில அரியவர் அம்பர்ச் செம்பியர்செறிகழல் இறைசெய்த கோயில் சேர்வரே.
சொற்பிரிப்பு
"வெறி கிளர் மலர்மிசையவனும், வெந் தொழில்பொறி கிளர் அரவு அணைப் புல்கு செல்வனும்,அறிகில அரியவர் அம்பர், செம்பியர்செறி கழல் இறை செய்த கோயில் சேர்வரே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

வழிதலை பறிதலை யவர்கள் கட்டியமொழிதலைப் பயனென மொழியல் வம்மினோஅழிதலை பொருபுனல் அம்பர் மாநகர்உழிதலை யொழிந்துளர் உமையுந் தாமுமே.
சொற்பிரிப்பு
"வழி தலை, பறி தலை, அவர்கள் கட்டியமொழிதலைப் பயன் என மொழியல்! வம்மினோ!அழிது அலை பொரு புனல் அம்பர் மா நகர்உழிதலை ஒழிந்து உளர், உமையும் தாமுமே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

அழகரை யடிகளை அம்பர் மேவியநிழல்திகழ் சடைமுடி நீல கண்டரைஉமிழ்திரை யுலகினில் ஓதுவீர் கொண்மின்தமிழ்கெழு விரகினன் தமிழ்செய் மாலையே.
சொற்பிரிப்பு
"அழகரை, அடிகளை, அம்பர் மேவியநிழல் திகழ் சடைமுடி நீலகண்டரை,உமிழ் திரை உலகினில் ஓதுவீர்! கொண்மின்-தமிழ் கெழு விரகினன் தமிழ்செய்மாலையே!"
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.