திருமுறை 3 · 3.017 · 11

திருவிசயமங்கை

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரபஞ்சமம்
தலம்
விசயமங்கை
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

மருவமர் குழலுமை பங்கர் வார்சடைஅரவமர் கொள்கையெம் அடிகள் கோயிலாங்குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்விரவிய பொழிலணி விசய மங்கையே.
சொற்பிரிப்பு
"மரு அமர் குழல் உமை பங்கர், வார்சடைஅரவு அமர் கொள்கை எம் அடிகள், கோயில் ஆம்குரவு, அமர் சுரபுனை, கோங்கு, வேங்கைகள்விரவிய பொழில் அணி விசயமங்கையே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கீதமுன் இசைதரக் கிளரும் வீணையர்பூதமுன் இயல்புடைப் புனிதர் பொன்னகர்கோதனம் வழிபடக் குலவு நான்மறைவேதியர் தொழுதெழு விசய மங்கையே.
சொற்பிரிப்பு
"கீதம் முன் இசைதரக் கிளரும் வீணையர்பூதம் முன் இயல்பு உடைப் புனிதர், பொன் நகர்கோதனம் வழிபட, குலவு நால்மறைவேதியர் தொழுது எழு விசயமங்கையே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அக்கர வரையினர் அரிவை பாகமாத்தொக்கநல் விடையுடைச் சோதி தொன்னகர்தக்கநல் வானவர் தலைவர் நாடொறும்மிக்கவர் தொழுதெழு விசய மங்கையே.
சொற்பிரிப்பு
"அக்கு அரவு அரையினர், அரிவை பாகமாத்தொக்க நல் விடை உடைச் சோதி, தொல்—நகர்தக்க நல் வானவர், தலைவர், நாள்தொறும்மிக்கவர், தொழுது எழு விசயமங்கையே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

தொடைமலி இதழியுந் துன்எ ருக்கொடுபுடைமலி சடைமுடி யடிகள் பொன்னகர்படைமலி மழுவினர் பைங்கண் மூரிவெள்விடைமலி கொடியணல் விசய மங்கையே.
சொற்பிரிப்பு
"தொடை மலி இதழியும் துன் எருக்கொடுபுடை மலி சடை முடி அடிகள் பொன் நகர்படை மலி மழுவினர், பைங்கண் மூரி வெள்விடை மலி கொடி அணல், விசயமங்கையே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

தோடமர் காதினன் துதைந்த நீற்றினன்ஏடமர் கோதையோ டினித மர்விடங்காடமர் மாகரி கதறப் போர்த்ததோர்வேடம துடையணல் விசய மங்கையே.
சொற்பிரிப்பு
"தோடு அமர் காதினன், துதைந்த நீற்றினன்,ஏடு அமர் கோதையோடு இனிது அமர்வு இடம்காடு அமர் மா கரி கதறப் போர்த்தது ஓர்வேடம் அது உடை அணல் விசயமங்கையே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மைப்புரை கண்ணுமை பங்கன் வண்டழல்ஒப்புரை மேனியெம் முடைய வன்னகர்அப்பொடு மலர்கொடங் கிறைஞ்சி வானவர்மெய்ப்பட அருள்புரி விசய மங்கையே.
சொற்பிரிப்பு
"மைப் புரை கண் உமை பங்கன், வண் தழல்ஒப்பு உரை மேனி எம் உடையவன், நகர்அப்பொடு மலர்கொடு அங்கு இறைஞ்சி, வானவர்மெய்ப்பட அருள்புரி விசயமங்கையே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

இரும்பொனின் மலைவிலின் எரிச ரத்தினால்வரும்புரங் களைப்பொடி செய்த மைந்தனூர்சுரும்பமர் கொன்றையுந் தூய மத்தமும்விரும்பிய சடையணல் விசய மங்கையே.
சொற்பிரிப்பு
"இரும் பொனின் மலைவிலின், எரிசரத்தினால்,வரும் புரங்களைப் பொடி செய்த மைந்தன் ஊர்சுரும்பு அமர் கொன்றையும், தூய மத்தமும்,விரும்பிய சடை அணல் விசயமங்கையே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

உளங்கையி லிருபதோ டொருப துங்கொடாங்களந்தரும் வரையெடுத் திடும்அ ரக்கனைத்தளர்ந்துடல் நெரிதர அடர்த்த தன்மையன்விளங்கிழை யொடும்புகும் விசய மங்கையே.
சொற்பிரிப்பு
"உளங்கையில், இருபதோடு ஒருபதும் கொடு, ஆங்குஅளந்து அரும் வரை எடுத்திடும் அரக்கனை,தளர்ந்து உடல் நெரிதர, அடர்த்த தன்மையன்விளங்கிழையொடும் புகும், விசயமங்கையே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

மண்ணினை யுண்டவன் மலரின் மேலுறைஅண்ணல்கள் தமக்களப் பரிய அத்தனூர்தண்ணறுஞ் சாந்தமும் பூவும் நீர்கொடுவிண்ணவர் தொழுதெழு விசய மங்கையே.
சொற்பிரிப்பு
"மண்ணினை உண்டவன் மலரின்மேல் உறைஅண்ணல்கள் தமக்கு அளப்பு அரிய அத்தன் ஊர்தண் நறுஞ்சாந்தமும் பூவும் நீர்கொடுவிண்ணவர் தொழுது எழு விசயமங்கையே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கஞ்சியுங் கவளமுண் கவணர் கட்டுரைநஞ்சினுங் கொடியன நமர்கள் தேர்கிலார்செஞ்சடை முடியுடைத் தேவன் நன்னகர்விஞ்சையர் தொழுதெழு விசய மங்கையே.
சொற்பிரிப்பு
"கஞ்சியும் கவளம் உண் கவணர் கட்டுரைநஞ்சினும் கொடியன; நமர்கள் தேர்கிலார்செஞ்சடைமுடி உடைத் தேவன் நன்நகர்விஞ்சையர் தொழுது எழு விசயமங்கையே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

விண்ணவர் தொழுதெழு விசய மங்கையைநண்ணிய புகலியுள் ஞான சம்பந்தன்பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே.
சொற்பிரிப்பு
"விண்ணவர் தொழுது எழு விசயமங்கையை,நண்ணிய புகலியுள் ஞானசம்பந்தன்,பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்புண்ணியர்; சிவகதி புகுதல் திண்ணமே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.