திருமுறை 3 · 3.016 · 11

திருக்கொள்ளிக்காடு

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரபஞ்சமம்
தலம்
கொள்ளிக்காடு
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

நிணம்படு சுடலையின் நீறு பூசிநின்றிணங்குவர் பேய்களோ டிடுவர் மாநடம்உணங்கல்வெண் டலைதனில் உண்ப ராயினுங்குணம்பெரி துடையர்நங் கொள்ளிக் காடரே.
சொற்பிரிப்பு
நிணம் படு சுடலையில், நீறு பூசி நின்று,இணங்குவர், பேய்களோடு; இடுவர், மாநடம்;உணங்கல் வெண் தலைதனில் உண்பர்; ஆயினும்,குணம் பெரிது உடையர் நம் கொள்ளிக்காடரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஆற்றநல் அடியிணை அலர்கொண் டேத்துவான்சாற்றிய அந்தணன் தகுதி கண்டநாள்மாற்றல னாகிமுன் அடர்த்து வந்தணைகூற்றினை யுதைத்தனர் கொள்ளிக் காடரே.
சொற்பிரிப்பு
"ஆற்ற நல் அடி இணை அலர் கொண்டு ஏத்துவான்,சாற்றிய அந்தணன் தகுதி கண்ட நாள்மாற்றலன் ஆகி முன் அடர்த்து வந்து அணைகூற்றினை உதைத்தனர் கொள்ளிக்காடரே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அத்தகு வானவர்க் காக மால்விடம்வைத்தவர் மணிபுரை கண்டத் தின்னுளேமத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்கொத்தலர் கொன்றையர் கொள்ளிக் காடரே.
சொற்பிரிப்பு
"அத்தகு வானவர்க்கு ஆக, மால்விடம்வைத்தவர், மணி புரை கண்டத்தி(ன்)னுளே;மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்கொத்து அலர் கொன்றையர் கொள்ளிக்காடரே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பாவணம் மேவுசொன் மாலை யிற்பலநாவணங் கொள்கையின் நவின்ற செய்கையர்ஆவணங் கொண்டெமை யாள்வ ராயினுங்கோவணங் கொள்கையர் கொள்ளிக் காடரே.
சொற்பிரிப்பு
"பா வணம் மேவு சொல்மாலையின், பலநா வணம் கொள்கையின் நவின்ற செய்கையர்;ஆவணம் கொண்டு எமை ஆள்வர் ஆயினும்,கோவணம் கொள்கையர் கொள்ளிக்காடரே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வாரணி வனமுலை மங்கை யாளொடுஞ்சீரணி திருவுருத் திகழ்ந்த சென்னியர்நாரணி சிலைதனால் நணுக லார்எயில்கூரெரி கொளுவினர் கொள்ளிக் காடரே.
சொற்பிரிப்பு
"வார் அணி வனமுலை மங்கையாளொடும்சீர் அணி திரு உருத் திகழ்ந்த சென்னியர்;நார் அணி சிலைதனால் நணுகலார் எயில்கூர் எரி கொளுவினர் கொள்ளிக்காடரே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பஞ்சுதோய் மெல்லடிப் பாவை யாளொடும்மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாடொறும்வெஞ்சின மருப்பொடு விரைய வந்தடைகுஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே.
சொற்பிரிப்பு
"பஞ்சு தோய் மெல் அடிப் பாவையாளொடும்மஞ்சு தோய் கயிலையுள் மகிழ்வர், நாள்தொறும்;வெஞ்சின மருப்பொடு விரைய வந்து அடைகுஞ்சரம் உரித்தனர் கொள்ளிக்காடரே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

இறையுறு வரிவளை இசைகள் பாடிடஅறையுறு கழலடி ஆர்க்க ஆடுவர்சிறையுறு விரிபுனல் சென்னி யின்மிசைக்குறையுறு மதியினர் கொள்ளிக் காடரே.
சொற்பிரிப்பு
"இறை உறு வரி வளை இசைகள் பாடிட,அறை உறு கழல் அடி ஆர்க்க, ஆடுவர்;சிறை உறு விரிபுனல் சென்னியின் மிசைக்குறை உறு மதியினர் கொள்ளிக்காடரே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

எடுத்தனன் கயிலையை இயல் வலியினால்அடர்த்தனர் திருவிர லால்அ லறிடப்படுத்தன ரென்றவன் பாடல் பாடலுங்கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளிக் காடரே.
சொற்பிரிப்பு
"எடுத்தனன் கயிலையை, இயல் வலியினால்,அடர்த்தனர் திருவிரலால்; அலறிடப்படுத்தனர்; ஏன்று அவன் பாடல் பாடலும்,கொடுத்தனர், கொற்றவாள்; கொள்ளிக்காடரே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

தேடினா ரயன்முடி மாலுஞ் சேவடிநாடினா ரவரென்று நணுக கிற்றிலர்பாடினார் பரிவொடு பத்தர் சித்தமுங்கூடினார்க் கருள்செய்வர் கொள்ளிக் காடரே.
சொற்பிரிப்பு
"தேடினார், அயன் முடி, மாலும் சேவடி;நாடினார் அவர் என்றும் நணுககிற்றிலர்;பாடினார், பரிவொடு; பத்தர் சித்தமும்கூடினார்க்கு அருள்செய்வர் கொள்ளிக்காடரே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

நாடிநின் றறிவில்நா ணிலிகள் சாக்கியர்ஓடிமுன் ஓதிய வுரைகள் மெய்யலபாடுவர் நான்மறை பயின்ற மாதொடுங்கூடுவர் திருவுருக் கொள்ளிக் காடரே.
சொற்பிரிப்பு
"நாடி நின்று, அறிவு இல் நாண் இலிகள், சாக்கியர்ஓடி முன் ஓதிய உரைகள் மெய் அல;பாடுவர், நால்மறை; பயின்ற மாதொடும்கூடுவர், திரு உரு; கொள்ளிக்காடரே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

நற்றவர் காழியுள் ஞான சம்பந்தன்குற்றமில் பெரும்புகழ்க் கொள்ளிக் காடரைச்சொற்றமிழ் இன்னிசை மாலை சோர்வின்றிக்கற்றவர் கழலடி காண வல்லரே.
சொற்பிரிப்பு
"நல்—தவர் காழியுள் ஞானசம்பந்தன்,குற்றம் இல் பெரும் புகழ்க் கொள்ளிக்காடரைச்சொல்—தமிழ் இன் இசைமாலை, சோர்வு இன்றிக்கற்றவர், கழல் அடி காண வல்லரே."
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.