திருமுறை 3 · 3.014 · 11

திருப்பைஞ்ஞீலி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரபஞ்சமம்
தலம்
பைஞ்ஞீலி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

ஆரிடம் பாடிலர் அடிகள் காடலால்ஓரிடங் குறைவிலர் உடையர் கோவணம்நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே.
சொற்பிரிப்பு
ஆரிடம் பாடலர், அடிகள், காடு அலால்ஓர் இடம் குறைவு இலர், உடையர் கோவணம்,நீர் இடம் சடை, விடை ஊர்தி, நித்தலும்பாரிடம் பணி செயும், பயில் பைஞ்ஞீலியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மருவிலார் திரிபுரம் எரிய மால்வரைபருவிலாக் குனித்தபைஞ் ஞீலி மேவலான்உருவிலான் பெருமையை உளங்கொ ளாதவத்திருவிலார் அவர்களைத் தெருட்ட லாகுமே.
சொற்பிரிப்பு
மருவு இலார் திரிபுரம் எரிய, மால்வரை,பரு விலாக் குனித்த பைஞ்ஞீலி மேவலான்,உரு இலான், பெருமையை உளம் கொளாத அத்திரு இலார் அவர்களைத் தெருட்டல் ஆகுமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அஞ்சுரும் பணிமலர் அமுதம் மாந்தித்தேன்பஞ்சுரம் பயிற்றுபைஞ் ஞீலி மேவலான்வெஞ்சுரந் தனிலுமை வெருவ வந்ததோர்குஞ்சரம் படவுரி போர்த்த கொள்கையே.
சொற்பிரிப்பு
அம் சுரும்பு அணி மலர் அமுதம் மாந்தி, தேன்பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி மேவலான்-வெஞ்சுரம்தனில், உமை வெருவ, வந்தது ஓர்குஞ்சரம் பட, உரி போர்த்த கொள்கையே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கோடல்கள் புறவணி கொல்லை முல்லைமேல்பாடல்வண் டிசைமுரல் பயில்பைஞ் ஞீலியார்பேடலர் ஆணலர் பெண்ணும் அல்லதோர்ஆடலை யுகந்தஎம் அடிகள் அல்லரே.
சொற்பிரிப்பு
கோடல்கள் புறவு அணி கொல்லை முல்லைமேல்பாடல் வண்டு இசை முரல் பயில் பைஞ்ஞீலியார்பேடு அலர், ஆண் அலர், பெண்ணும் அல்லது, ஓர்ஆடலை உகந்த எம் அடிகள் அல்லரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

விழியிலா நகுதலை விளங்கி ளம்பிறைசுழியிலார் வருபுனற் சூழல் தாங்கினான்பழியிலார் பரவுபைஞ் ஞீலி பாடலான்கிழியிலார் கேண்மையைக் கெடுக்க லாகுமே.
சொற்பிரிப்பு
விழி இலா நகுதலை, விளங்கு இளம்பிறை,சுழியில் ஆர் வருபுனல் சூழல் தாங்கினான்-பழி இலார் பரவு பைஞ்ஞீலி பாடலான்;கிழி இலார் கேண்மையைக் கெடுக்கல் ஆகுமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

விடையுடைக் கொடிவல னேந்தி வெண்மழுப்படையுடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவலான்துடியிடைக் கலையல்கு லாளோர் பாகமாச்சடையிடைப் புனல்வைத்த சதுரன் அல்லனே.
சொற்பிரிப்பு
விடை உடைக் கொடி வலன் ஏந்தி, வெண்மழுப்படை உடைக் கடவுள் பைஞ்ஞீலி மேவலான்;துடி இடைக் கலை அல்குலாள் ஓர்பாகமா,சடை இடைப் புனல் வைத்த சதுரன் அல்லனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

தூயவன் தூயவெண் ணீறு மேனிமேற்பாயவன் பாயபைஞ் ஞீலி கோயிலாமேயவன் வேய்புரை தோளி பாகமாஏயவன் எனைச்செயுந் தன்மை யென்கொலோ.
சொற்பிரிப்பு
தூயவன், தூய வெண் நீறு மேனிமேல்பாயவன்—பாய பைஞ்ஞீலி கோயிலாமேயவன்; வேய் புரை தோளி பாகமாஏயவன், எனைச் செயும் தன்மை என்கொலோ?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

தொத்தின தோள்முடி யுடைய வன்றலைபத்தினை நெரித்தபைஞ் ஞீலி மேவலான்முத்தினை முறுவல்செய் தாளோர் பாகமாப்பொத்தினன் திருந்தடி பொருந்தி வாழ்மினே.
சொற்பிரிப்பு
தொத்தின தோள் முடி உடையவன் தலை-பத்தினை நெரித்த பைஞ்ஞீலி மேவலான்,முத்தினை முறுவல் செய்தாள் ஒர்பாகமாப்பொத்தினன், திருந்து அடி பொருந்தி வாழ்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நீருடைப் போதுறை வானும் மாலுமாய்ச்சீருடைக் கழலடி சென்னி காண்கிலர்பாருடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவியதாருடைக் கொன்றையந் தலைவர் தன்மையே.
சொற்பிரிப்பு
நீர் உடைப் போது உறைவானும் மாலும் ஆய்,சீர் உடைக் கழல் அடி சென்னி காண்கிலர்;பார் உடைக் கடவுள், பைஞ்ஞீலி மேவியதார் உடைக்கொன்றை அம் தலைவர், தன்மையே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பீலியார் பெருமையும் பிடகர் நூன்மையுஞ்சாலியா தவர்களைச் சாதி யாததோர்கோலியா வருவரை கூட்டி யெய்தபைஞ்ஞீலியான் கழலடி நினைந்து வாழ்மினே.
சொற்பிரிப்பு
பீலியார் பெருமையும், பிடகர் நூன்மையும்,சாலியாதவர்களைச் சாதியாதது, ஓர்கோலியா அரு வரை கூட்டி எய்த பைஞ்-ஞீலியான் கழல் அடி நினைந்து வாழ்மினே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

கண்புனல் விளைவயற் காழிக் கற்பகம்நண்புணர் அருமறை ஞான சம்பந்தன்பண்பினர் பரவுபைஞ் ஞீலி பாடுவார்உண்பின வுலகினி லோங்கி வாழ்வரே.
சொற்பிரிப்பு
கண் புனல் விளை வயல் காழிக் கற்பகம்நண்பு உணர் அருமறை ஞானசம்பந்தன்பண்பினர் பரவு பைஞ்ஞீலி பாடுவார்உண்பின உலகினில், ஓங்கி வாழ்வரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.