திருமுறை 3 · 3.012 · 11

திருக்கோட்டாறு

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரபஞ்சமம்
தலம்
கோட்டாறு
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

வேதியன் விண்ணவ ரேத்தநின் றான்விளங் கும்மறைஓதிய வொண்பொரு ளாகிநின் றானொளி யார்கிளிகோதிய தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள்ஆதியை யேநினைந் தேத்தவல் லார்க்கல்லல் இல்லையே.
சொற்பிரிப்பு
வேதியன், விண்ணவர் ஏத்த நின்றான், விளங்கும் மறைஓதிய ஒண்பொருள் ஆகி நின்றான், ஒளி ஆர் கிளிகோதிய தண்பொழில் சூழ்ந்து அழகு ஆர் திருக்கோட்டாற்றுள்ஆதியையே நினைந்து ஏத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஏலம லர்க்குழல் மங்கைநல் லாளிம வான்மகள்பாலம ருந்திரு மேனியெங் கள்பர மேட்டியுங்கோலம லர்ப்பொழில் சூழ்ந்தெழி லார்திருக் கோட்டாற்றுள்ஆலநீ ழற்கீழ் இருந்தறஞ் சொன்ன அழகனே.
சொற்பிரிப்பு
ஏல மலர்க் குழல் மங்கை நல்லாள், இமவான்மகள்பால் அமரும் திருமேனி எங்கள் பரமேட்டியும்கோல மலர்ப்பொழில் சூழ்ந்து, எழில் ஆர் திருக்கோட்டாற்றுள்ஆல நிழல் கீழ் இருந்து, அறம் சொன்ன அழகனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

இலைமல்கு சூலமொன் றேந்தினா னும்இமை யோர்தொழமலைமல்கு மங்கையோர் பங்கனா யம்மணி கண்டனுங்குலைமல்கு தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள்அலைமல்கு வார்சடை யேற்றுகந் தஅழ கனன்றே.
சொற்பிரிப்பு
இலை மல்கு சூலம் ஒன்று ஏந்தினானும், இமையோர் தொழமலை மல்கு மங்கை ஓர்பங்கன் ஆய(ம்) மணிகண்டனும்குலை மல்கு தண்பொழில் சூழ்ந்து, அழகு ஆர்திருக்கோட்டாற்றுள்அலை மல்கு வார்சடை ஏற்று உகந்த அழகன் அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஊனம ரும்முட லுள்ளிருந் தவ்வுமை பங்கனும்வானம ரும்மதி சென்னிவைத் தமறை யோதியுந்தேனம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள்தானம ரும்விடை யானும்எங் கள்தலை வனன்றே.
சொற்பிரிப்பு
ஊன் அமரும்(ம்) உடலுள் இருந்த(வ்) உமைபங்கனும்வான் அமரும் மதி சென்னி வைத்த மறை ஓதியும்,தேன் அமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்தான் அமரும் விடையானும், எங்கள் தலைவன் அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வம்பல ரும்மலர்க் கோதைபா கம்மகிழ் மைந்தனுஞ்செம்பவ ளத்திரு மேனிவெண் ணீறணி செல்வனுங்கொம்பம ரும்மலர் வண்டுகெண் டுந்திருக் கோட்டாற்றுள்நம்பனெ னப்பணி வார்க்கருள் செய்யெங்கள் நாதனே.
சொற்பிரிப்பு
வம்பு அலரும் மலர்க்கோதை பாகம் மகிழ் மைந்தனும்,செம்பவளத்திருமேனி வெண்நீறு அணி செல்வனும்கொம்பு அமரும் மலர் வண்டு கெண்டும் திருக்கோட்டாற்றுள்நம்பன் எனப் பணிவார்க்கு அருள்செய் எங்கள் நாதனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பந்தம ரும்விரல் மங்கைநல் லாளொரு பாகமாவெந்தம ரும்பொடிப் பூசவல் லவிகிர் தன்மிகுங்கொந்தம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள்அந்தண னைநினைந் தேத்தவல் லார்க்கில்லை அல்லலே.
சொற்பிரிப்பு
பந்து அமரும் விரல் மங்கை நல்லாள் ஒருபாகமா,வெந்து அமரும் பொடிப் பூச வல்ல விகிர்தன், மிகும்கொந்து அமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்அந்தணனை, நினைந்து ஏத்த வல்லார்க்கு இல்லை, அல்லலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

துண்டம ரும்பிறை சூடிநீ டுசுடர் வண்ணனும்வண்டம ருங்குழல் மங்கைநல் லாளொரு பங்கனுந்தெண்டிரை நீர்வயல் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள்அண்டமும் எண்டிசை யாகிநின் றஅழ கனன்றே.
சொற்பிரிப்பு
துண்டு அமரும் பிறை சூடி நீடு சுடர்வண்ணனும்,வண்டு அமரும் குழல் மங்கை நல்லாள் ஒருபங்கனும்தெண்திரை நீர் வயல் சூழ்ந்து அழகு ஆர் திருக்கோட்டாற்றுள்அண்டமும் எண் திசை ஆகி நின்ற அழகன் அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

இரவம ருந்நிறம் பெற்றுடை யஇலங் கைக்கிறைகரவம ரக்கயி லையெடுத் தான்வலி செற்றவன்குரவம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள்அரவம ருஞ்சடை யான்அடி யார்க்கருள் செய்யுமே.
சொற்பிரிப்பு
இரவு அமரும் நிறம் பெற்று உடைய இலங்கைக்கு இறை,கரவு அமரக் கயிலை எடுத்தான், வலி செற்றவன்-குரவு அமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்அரவு அமரும் சடையான்; அடியார்க்கு அருள்செய்யுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஓங்கிய நாரணன் நான்முக னும்முண ராவகைநீங்கிய தீயுரு வாகிநின் றநிம லன்நிழற்கோங்கம ரும்பொழில் சூழ்ந்தெழி லார்திருக் கோட்டாற்றுள்ஆங்கம ரும்பெரு மான்அம ரர்க்கம ரனன்றே.
சொற்பிரிப்பு
ஓங்கிய நாரணன் நான்முகனும் உணரா வகை,நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன்—நிழல்கோங்கு அமரும் பொழில் சூழ்ந்து, எழில் ஆர் திருக்கோட்டாற்றுள்ஆங்கு அமரும் பெருமான்; அமரர்க்கு அமரன் அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கடுக்கொடுத் ததுவ ராடையர் காட்சியில் லாததோர்தடுக்கிடுக் கிச்சம ணேதிரி வார்கட்குத் தன்னருள்கொடுக்ககில் லாக்குழ கன்அம ருந்திருக் கோட்டாற்றுள்இடுக்கணின் றித்தொழு வார்அம ரர்க்கிறை யாவரே.
சொற்பிரிப்பு
கடுக் கொடுத்த துவர் ஆடையர், காட்சி இல்லாதது ஓர்தடுக்கு இடுக்கிச் சமணே திரிவார்கட்கு, தன் அருள்கொடுக்ககிலாக் குழகன் அமரும் திருக்கோட்டாற்றுள்இடுக்கண் இன்றித் தொழுவார் அமரர்க்கு இறை ஆவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

கொடியுயர் மால்விடை யூர்தியி னான்திருக் கோட்டாற்றுள்அடிகழ லார்க்கநின் றாடவல் லஅரு ளாளனைக்கடிகம ழும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்சொற்படியிவை பாடிநின் றாடவல் லார்க்கில்லை பாவமே.
சொற்பிரிப்பு
கொடி உயர் மால்விடை ஊர்தியினான் திருக்கோட்டாற்றுள்அடி கழல் ஆர்க்க நின்று ஆட வல்ல அருளாளனைக்,கடி கமழும் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் சொல்-படி, இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை, பாவமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.