1
அலைவளர் தண்மதி யோடய லேயடக் கியுமைமுலைவளர் பாகமு யங்கவல் லமுதல் வன்முனிஇலைவளர் தாழைகள் விம்முகா னல்இரா மேச்சுரம்தலைவளர் கோலநன் மாலையன் தானிருந் தாட்சியே.
சொற்பிரிப்பு
அலை, வளர் தண்மதியோடு அயலே அடக்கி, உமைமுலை வளர் பாகம் முயங்க வல்ல முதல்வன்; முனி;இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம்,தலை வளர் கோல நல் மாலையன்தான் இருந்துஆட்சியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.