1
சடையுடை யானும்நெய் யாடலா னுஞ்சரி கோவணஉடையுடை யானுமை ஆர்ந்தவொண் கண்ணுமை கேள்வனுங்கடையுடை நன்னெடு மாடமோங் குங்கட வூர்தனுள்விடையுடை யண்ணலும் வீரட்டா னத்தர னல்லனே.
சொற்பிரிப்பு
சடை உடையானும், நெய் ஆடலானும், சரி கோவண-உடை உடையானும், மை ஆர்ந்த ஒண்கண் உமை கேள்வனும்,கடை உடை நன்நெடு மாடம் ஓங்கும் கடவூர்தனுள்விடை உடை அண்ணலும் வீரட்டானத்து அரன்அல்லனே?
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.