1
கண்ணுத லானும்வெண் ணீற்றினா னுங்கழ லார்க்கவேபண்ணிசை பாடநின் றாடினா னும்பரஞ் சோதியும்புண்ணிய நான்மறை யோர்களேத் தும்புக லிந்நகர்ப்பெண்ணின்நல் லாளொடும் வீற்றிருந் தபெரு மானன்றே.
சொற்பிரிப்பு
கண் நுதலானும், வெண் நீற்றினானும், கழல் ஆர்க்கவேபண் இசை பாட நின்று ஆடினானும், பரஞ்சோதியும்புண்ணிய நால்மறையோர்கள் ஏத்தும் புகலி(ந்) நகர்,பெண்ணின் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமான் அன்றே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.