திருமுறை 3 · 3.006 · 11

திருக்கொள்ளம்பூதூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரபஞ்சமம்
தலம்
கொள்ளம்பூதூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர்நட்டம் ஆடிய நம்பனை யுள்கச்செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே.
சொற்பிரிப்பு
கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்நட்டம் ஆடிய நம்பனை உள்க,செல்ல உந்துக சிந்தையார் தொழ, நல்கும் ஆறு அருள் நம்பனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கோட்ட கக்கழனிக் கொள்ளம் பூதூர்நாட்ட கத்துறை நம்பனை யுள்கச்செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே.
சொற்பிரிப்பு
கோட்டகக் கழனிக் கொள்ளம்பூதூர்நாட்டு அகத்து உறை நம்பனை உள்க,செல்ல உந்துக சிந்தையார் தொழ, நல்கும் ஆறு அருள் நம்பனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

குலையி னார்தெங்கு சூழ்கொள்ளம் பூதூர்விலையி லாட்கொண்ட விகிர்தனை யுள்கச்செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே.
சொற்பிரிப்பு
குலையின் ஆர் தெங்கு சூழ் கொள்ளம்பூதூர்விலையில் ஆட்கொண்ட விகிர்தனை உள்க,செல்ல உந்துக சிந்தையார் தொழ, நல்கும் ஆறு அருள் நம்பனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

குவளை கண்மலருங் கொள்ளம் பூதூர்த்தவள நீறணி தலைவனை யுள்கச்செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே.
சொற்பிரிப்பு
குவளை கண் மலரும் கொள்ளம்பூதூர்த்தவள நீறு அணி தலைவனை உள்க,செல்ல உந்துக சிந்தையார் தொழ, நல்கும் ஆறு அருள் நம்பனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கொன்றை பொன்சொரியுங் கொள்ளம் பூதூர்நின்ற புன்சடை நிமலனை யுள்கச்செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே.
சொற்பிரிப்பு
கொன்றை பொன் சொரியும் கொள்ளம்பூதூர்நின்ற புன்சடை நிமலனை உள்க,செல்ல உந்துக சிந்தையார் தொழ, நல்கும் ஆறு அருள் நம்பனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஓடம் வந்தணையுங் கொள்ளம் பூதூர்ஆடல் பேணிய அடிகளை யுள்கச்செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே.
சொற்பிரிப்பு
ஓடம் வந்து அணையும் கொள்ளம்பூதூர்ஆடல் பேணிய அடிகளை உள்க,செல்ல உந்துக சிந்தையார் தொழ, நல்கும் ஆறு அருள் நம்பனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

ஆறு வந்தணையுங் கொள்ளம் பூதூர்ஏறு தாங்கிய இறைவனை யுள்கச்செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே.
சொற்பிரிப்பு
ஆறு வந்து அணையும் கொள்ளம்பூதூர்ஏறு தாங்கிய இறைவனை உள்க,செல்ல உந்துக சிந்தையார் தொழ, நல்கும் ஆறு அருள் நம்பனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

குரக்கினம் பயிலுங் கொள்ளம் பூதூர்அரக்கனைச் செற்ற ஆதியை யுள்கச்செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே.
சொற்பிரிப்பு
குரக்கு இனம் பயிலும் கொள்ளம்பூதூர்அரக்கனைச் செற்ற ஆதியை உள்க,செல்ல உந்துக சிந்தையார் தொழ, நல்கும் ஆறு அருள் நம்பனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பருவ ரால்உகளுங் கொள்ளம் பூதூர்இருவர் காண்பரி யான்கழ லுள்கச்செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே.
சொற்பிரிப்பு
பரு வரால் உகளும் கொள்ளம்பூதூர்இருவர் காண்பு அரியான் கழல் உள்க,செல்ல உந்துக சிந்தையார் தொழ, நல்கும் ஆறு அருள் நம்பனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

நீர கக்கழனிக் கொள்ளம் பூதூர்த்தேர மண்செற்ற செல்வனை யுள்கச்செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே.
சொற்பிரிப்பு
நீர் அகக் கழனிக் கொள்ளம்பூதூர்த்தேர் அமண் செற்ற செல்வனை உள்க,செல்ல உந்துக சிந்தையார் தொழ, நல்கும் ஆறு அருள் நம்பனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

கொன்றை சேர்சடையான் கொள்ளம் பூதூர்நன்று காழியுள் ஞானசம் பந்தன்இன்றுசொன் மாலைகொண் டேத்தவல் லார்போய் என்றும் வானவ ரோடிருப்பாரே.
சொற்பிரிப்பு
கொன்றை சேர் சடையான் கொள்ளம்பூதூர்,நன்று காழியுள் ஞானசம்பந்தன்இன்று சொல் மாலை கொண்டு ஏத்த வல்லார், போய், என்றும் வானவரோடு இருப்பாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.