1
இடரினுந் தளரினும் எனதுறுநோய்தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சைமிடறினில் அடக்கிய வேதியனேஇதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
சொற்பிரிப்பு
இடரினும், தளரினும், எனது உறு நோய்தொடரினும், உன கழல் தொழுது எழுவேன்;கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சைமிடறினில் அடக்கிய வேதியனே!இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.