1
இயலிசை யெனும்பொரு ளின்திறமாம்புயலன மிடறுடைப் புண்ணியனேகயலன அரிநெடுங் கண்ணியொடும்அயலுல கடிதொழ அமர்ந்தவனேகலனாவது வெண்டலை கடிபொழிற் புகலிதன்னுள் நிலனாள்தொறும் இன்புற நிறைமதி யருளினனே.
சொற்பிரிப்பு
இயல் இசை எனும் பொருளின் திறம் ஆம்புயல் அன மிடறு உடைப் புண்ணியனே!கயல் அன வரி நெடுங்கண்ணியொடும்அயல் உலகு அடி தொழ அமர்ந்தவனே!கலன் ஆவது வெண்தலை; கடிபொழில் புகலி தன்னுள்,நிலன் நாள்தொறும் இன்பு உற, நிறை மதி அருளினனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.