1
பந்துசேர்விர லாள்பவ ளத்துவர் வாயினாள்பனி மாமதி போல்முகத்தந்தமில்புக ழாள்மலை மாதொடும் ஆதிப்பிரான்வந்துசேர்விடம் வானவ ரெத்திசை யுந்நிறைந்து வலஞ்செய்து மாமலர்புந்திசெய்திறைஞ் சிப்பொழி பூந்தராய் போற்றுதுமே.
சொற்பிரிப்பு
பந்து சேர் விரலாள், பவளத்துவர் வாயினாள், பனி மா மதி போல் முகத்துஅந்தம் இல் புகழாள், மலைமாதொடும் ஆதிப்பிரான்வந்து சேர்வு இடம் வானவர் எத்திசையும் நிறைந்து, வலம்செய்து, மாமலர்புந்தி செய்து இறைஞ்சிப் பொழி பூந்தராய் போற்றுதுமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.