1
ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர் அந்தணர்பிரி யாதசிற் றம்பலம்நாடினாயிடமா நறுங்கொன்றை நயந்தவனேபாடினாய்மறை யோடுபல் கீதமும் பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள்சூடினாயருளாய் சுருங்கஎம தொல்வினையே.
சொற்பிரிப்பு
ஆடினாய், நறுநெய்யொடு,பால்,தயிர்!அந்தணர்பிரியாதசிற்றம்பலம்நாடினாய், இடமா! நறுங்கொன்றை நயந்தவனே!பாடினாய், மறையோடுபல்கீதமும்!பல்சடைப்பனிகால்கதிர் வெண்திங்கள்சூடினாய்! அருளாய், சுருங்க எம தொல்வினையே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.