1
சொற்பிரிப்பு
உரை
செஞ்சடையில் குலாவுவன- கொன்றை, பிறை, கங்கை, கோடல் (வெண் காந்தள்) கூவிள (வில்வ) மாலை, ஊமத்தம்பூ. தலைமாலை. வல்லி - உமாதேவியார். மாசுணம் - பாம்பு. நிலத்திலூர்ந்தும் புரண்டும் மாசு உண்ணுங் காரணத்தாற்பெற்ற பெயர். அழுக்கு அடையும் ஆடைக்கு மாகணி என்ற பெயர் உள்ளமை அறிக. பிறர் உடுத்த மாகணியும் தீண்டார் (ஆசாரக்கோவை). 'வல்லியத் தோல் ' என்றிருந்தது. லகரம் ளகரம் ஆகிய பிழை போலும். வல்லியம் - புலி.