1
சொற்பிரிப்பு
உரை
ஆரழலுக்கு இரையாச் செய்து ஊட்டி, இடுபலிக்கு உழல்பவர் அமர்ந்தார் என்றார். தென்கு (தெங்கு) + ஊர் = தெங்கூர்.
ஆரழலுக்கு இரையாச் செய்து ஊட்டி, இடுபலிக்கு உழல்பவர் அமர்ந்தார் என்றார். தென்கு (தெங்கு) + ஊர் = தெங்கூர்.
தன் அடி சித்தம் நினைவார் வினை என்றியைக்க. சித்தத்தில் நினைவார். செடிபடு- பாவத்தாலுண்டான. பிறையன் என்பது சிவனென்னும் பெயரளவாய் நின்று. தீர்க்கும் எனுமெச்சத்தைக் கொண்டது. கோள்- வலிமை, கொலை. புனல் பதித்த வித்தன் - நீரில் பதியச் செய்த விதையானவன் (தி.6 ப. 15 பா. 2) (திருவாசகம் 253).
வினை அகல அருள்பவர். விடை எருதுக்கு அதன் கழுத்தில் மணி கட்டுதல் உண்மையான், மணி அணிதிரு விடை எனப்பட்டது. தறுகண் - கொடுமை; அஞ்சத் தக்கவற்றிற்கு அஞ்சாமை. ‘தறுகணன் (நன்னூல்) கண் என்பதன் முன் சில முதனிலைகள் சேர்ந்து வெவ்வேறு பொருள் பயத்தலை - அலக்கண், புண்கண், இடுக்கண் (இடுங்குகண்) வண்கண் முதலியவற்றிற் காண்க.
பறைய - அழிய, பயப்பார். கொண்டல் - மேகம். வானிற்கு அடை. குரைகடல் - முழங்கும் கடல். வண்டு... விண்ட பொழில் - இயற்கை உணர்த்திற்று.
சுழித்த- சுழற்சியைச் செய்த. தெழித்து- கோபித்து. சிறையணிபறவை கழித்த வெண்டலை - பிரமகபாலம். அன்னப்பறவையான காரணம் பற்றியது.
தொல்லைவினை - பூர்வகர்மம், பிராரப்தம், சஞ்சிதம் இரண்டும். சுவண்டர் - சு- அண்டர் நல்லதேவர் எனவும் இடனில்லை. 'சுந்தரராய்த் தூமதியம் சூடுவது சுவண்டே' (தி. 7 பா. 470) என்பது கொண்டு முன் பொருத்தம் என்றும். அது இங்குப் பொருந்தாது. எல்லி - தண்ணொளியுடைய திங்கள். எல் - ஒளி. சில்லை - இழிவு. பாசக்கடற்குளே வீழ்கின்றதே இழிவு. வில்லினார் - மேருமலையாகிய வில்லை உடையார்.
நெறி - திருநெறி. முறி - தளிர். முளைமதி - பிறை. வெறி - மணம்.
எண்- கணக்கு. விறல் - வலிமை. கருத்தர்- தலைவர் வினை முதல்வர். கண்ணி - கங்கை. பிறைக்கண்ணியுமாம். விண் உலாம் பொழில் - சோலையுயர்வு குறித்தது.
அயனும் மாலும் முறையே திருமுடியையும் திருவடியையும் தேடித் தான்காணார். இணை- ஒத்தன (இரண்டும்). பாட ... படையினார் - பாட என்னும் வினையெச்சம் படையை உடையவர் என்பதில் உள்ள உடையவர் எனும் வினைக் குறிப்பைக் கொண்டது, ஆடவல்லர். வேடத்தார் - வேட்டுவக் கோலத்தார்.
சடம் - உடம்பு, பொய். இடம் கொள் - மாயையைப் பற்றுக் கோடாகக் கொண்ட. இருமருப்பு- இரண்டு (பெருங்) கொம்பு. கடம் - மதநீர். களிற்றுரியர் - யானைத்தோலர். கனன்று - வெம்மை வீசி.
சந்தம் ஆயின பாடல்- சந்தப்பாடல். பந்தம் ஆயின பாவம் - வினைப்பற்று உண்டாவதற்கு ஏதுவான பாவங்கள். பாறுதல் - ஓடுதல். தேறுதல் - தெளிதல்.