1
சொற்பிரிப்பு
உரை
பட்டம்- உத்தரீயம். பாணி- கங்கை. 'பாணி மூவுலகும் புதைய மேல்மிதந்த தோணிபுரத்துறைந்தனை’ (தி. 1 ப. 1 பா. 128). 'விண்ணியல் பாணியன்' (பொன்வண். 30) 'நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன்'. புள் - பறவை. பேடை -பெண் பறவை.
பட்டம்- உத்தரீயம். பாணி- கங்கை. 'பாணி மூவுலகும் புதைய மேல்மிதந்த தோணிபுரத்துறைந்தனை’ (தி. 1 ப. 1 பா. 128). 'விண்ணியல் பாணியன்' (பொன்வண். 30) 'நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன்'. புள் - பறவை. பேடை -பெண் பறவை.
முயல் -களங்கம். திங்கள் (சந்திரன்) இடத்திருப்பது. அரிவை தெரிவை இரண்டும் மாதர் பருவத்தின் வேறுபாட்டாற்பெற்ற பெயர்கள். கண்மலரும் - கண் போல் பூக்கும். குவளைகள் பூக்கும் எனலுமாம்.
கயம் - நீர்நிலை. துணையல் -மாலை. 'கொண்டு' இரண்டனுள். ஒன்று துணையல் முதலியவற்றைக் கொண்டு என்றும் மற்றொன்று அடியை உளங்கொண்டு என்றும் கொள்ள நின்றமைஉணர்க. குறிப்பு அறிமுருகன் - முருக நாயனார் சிறப்புணர்த்திற்று. அவரது குறிப்பு அறியும் ஆற்றலை.தமக்கு நண்பருமாம் பெருமை தந்தை பிள்ளையாரே அறிவார். பூக்கள் திறக்கும் அநுபவ மிகுதியால் அவற்றைக் கொள்ளும் சமயக் குறிப்பும் ஆம்.
பண்ண வண்ணத்தர் - பண்ணிசை மயமான சிவபெருமான். 'ஏழிசையாய் இசைப் பயனாய்'. விண்ணவண்ணத்தர் - ஆகாசரூபர். பாகம் பெண்ண வண்ணத்தர் - அம்மையப்பர். அர்த்தநாரீசுவரர். ஆண் இணை பிணைந்த வண்ண வண்ணத்து எம்பெருமான் என்றது அறியத்தக்கது.
இதன் முதலடியோடு ஒத்தது முன் (தி. 2 ப. 90 பா. 1) உணர்ந்தது. பூச - பூசுதற்கு. நீற்றர் - நீறுடையவர். பூச என்னும் எச்சம் நீற்றர் என்னும் வினைக்குறிப்பில் உடையர் என்பதோடு முடிந்தது.
இளமுழை- இளமான். உளர்- அசைகின்ற; கழல்கின்ற. தளிர்களையுடைய கொடி. இளங்கொடி. தண்கயம் - குளிர்ந்த நீர் நிலையில். இரிய- சாய . சுனை மலரும் ஒளிருஞ் சடை.சடை முடிமேல் பிறை உடையார்.
தென்சொல் -தமிழ். விஞ்சுதல் - மிகுதல். வடசொல் - ஆரியபாடை. திசைமொழி-ஏனைய மொழிகளினின்று தமிழில் வந்து வழங்கும் சொற்கள். - சிவதோத்திரம் பாடும் பாஷைகள் குறிக்கப்பட்டன. நெஞ்சு இருள் - நெஞ்சிலுள்ள (அகத்து) இருள். எழில் நரம்பெடுத்தலாவது - இசைஎழுச்சியையுடைய யாழ்நரம்பில் அமைத்துப் பாடுதல். அஞ்சனம் -மை. நஞ்சுக்குவமை.
தசமுகன் (இராவணன்) சாமவேத கீதம்பாடி நலம் உற்றான். நாமதேயம் - பெயராற் சுட்டப்படுவது. கண்ணார் - நெற்றிக் கண்ணினார். வாமதேவர் - பஞ்சப்பிரம மந்திர ரூப மூர்த்திகளுள் ஒன்றாய் விளங்கும் சிவபிரான். சதாசிவருடைய ஐந்துமுகத்தில் நான்காவது வாமதேவம்.
அணங்கு- தெய்வம், அழகுமாம். செரு - இருவரும். சிவபிரானைக் காண்பேன் என்று சொல்லி நிகழ்த்திய போர். 'அவனொடு நாராயணனும் கருத்தழிய நம்பர் நகை செய்தார்'. அஞ்சுவித்து - அஞ்சச்செய்து. வாரணத்து உரி - யானைத்தோல்.
ஆடையினால் தம் உடம்பைப் போர்த்து உழல்வார் தேரர். உரைப்பன - உரைக்கும். புறப்புறச் சமயக் கொள்கைகளை. மெய் - வாய்மை. விரும்பேல் - விரும்பாதே. செய் - கழனி. வாளையும் கயலும் மீன்கள். மை - கருநிறம்.
போது - பூவின் முன்னைய பருவத்தது. மங்குல் - ஆகாயம். மதி தவழும் ஈச்சுரம் என்று கொண்டு. அத்திருக்கோயிலின் உயர்ச்சியைக் கருதுக. ஈச்சரத்தாருக்கு ஏற்றின் பிறையணிந்த வரலாறு குறித்ததாம். தங்கு சீர் - நிலைத்த சீர்த்தி. தண்டமிழ் என்றது இத்திருப்பதிகத்தை.