1
சொற்பிரிப்பு
உரை
மூங்கிலைப் போன்ற தோள்களை உடைய உமையம்மையை இடப்பாகத்தில் உடையவர்; நஞ்சுண்ட கண்டர்; அவர் நல்ல வீணையை மீட்டு, குற்றமற்ற பிறை, கங்கை ஆகியவற்றைத் தம் முடிமேல் அணிந்து என்னுடைய உள்ளத்தில் புகுந்தார்; அவ்வாறு என்னுள்ளத்தில் அவர் இருப்பதனால் ஞாயிறு முதல் சனி வரையிலான ஏழு கோள்களும், இராகு கேது ஆகிய இரு பாம்புகளும், எனக்குக் குற்றம் நீங்கினவாகும்; அவை தீயனவேயாயினும் சிவனடியார்களுக்கு நல்லனவாக மாறும்; அடியவர்களிடத்து அன்புள்ளன ஆகும்.