1
சொற்பிரிப்பு
உரை
திருநீலகண்டம் உடைய இறைவன்; கோபத்தை உடைய பெரிய யானையின் தோலினை உரித்தவன்; தனக்கு நிகரில்லாத சேல் மீன் போன்ற கண்ணியாகிய உமையை ஒருகூறாகக் கொண்டு திகழ்கின்ற கடவுள், அவர் பொருந்திய பதிதான் ஏதோவெனில், வேல் போன்ற கூரிய கண்களையுடைய மகளிர் விளையாடும் பண்ணோசையும் விழவினோசையும், வேதமுழக்கமும் மிக்க கருங்கடலின் ஓசையும் கலந்து தரும் கொடியாடும் மாடவீதிகளை உடைய திருக்கொச்சைவயமே.