1
சொற்பிரிப்பு
உரை
பூதகணங்களைப் படையாக உடையீர்! கொன்றைப்பூ மாலையினை அணிந்தீர்! கடலொலி போன்ற முழக்கமொடு உம்பர்களும் வானவர்களும் திருக்கோவிலினுள் புகுந்து, வேதம் இசைத்து மணமிக்க மலர்களைச் சொரிந்து வழிபடும் திருவடிகளை உடையீர்! திருவேணுபுரத்தை உம் திருப்பதியாகக் கொண்டீரே!