1
சொற்பிரிப்பு
உரை
நெஞ்சமே! பிராணன் மேல் வாங்கி, நாவற்றி, நீரினையும் உட்கொள நாவெழாது, பஞ்சில் தோய்த்துப் பிழிந்ததை உண்டு, மரணமுறுங் காலத்தில் சிவனடியைச் சிந்திக்க இயலாத அறிவிலிகளைப் போல நீ நாணம் கொண்டாயே! கவனமாய்ப் பாய்கின்ற ஏறின்மீது உகந்து ஏறிய நீலகண்டனது திருவாரூரைத் தொழுது உய்யலாம்; திருவாரூரைத் தொழப் பெறாமல் உயிர் கழியுமோ என மயக்கம் கொண்டு அஞ்சற்க.