1
சொற்பிரிப்பு
உரை
சீர் விளங்கிய பிரமனூர்; சீர் - பெருமை, அழகு. உயர்ந்தோங்கிய சோலைகளின் வளத்தையெல்லாம் தான் கவர்ந்து உயர்ந்து விளங்குவதால், மேற்சோலை வளம் கவரும் தோணிபுரம் என்றார். களங்கமில் ஊர் சண்பை- குற்றங்கள் இல்லாத சண்பை நகர். கமழ் காழி- மணங்கமழ்கின்ற காழி. வயங்கொச்சை- கொச்சைவயம், என்றும் இளையோனாகிய குமரனைப் பெற்று இமையவர்களுடைய பகையாகிய அசுரர்களை எறிவித்த இறைவனின் ஊர். எறிவித்திறைவனூரே - எறிவித்த என்பதில் பெயரெச்சத்தகரம் தொக்கு எறிவித்திறைவன் என ஆயிற்று.