1
சொற்பிரிப்பு
உரை
பிறையைச் சடையில் திருத்தமாகச் சூடி, தெளிந்த கங்கை நதியைச் சடையில் மறைத்து உமையம்மையைத்தன் மேனியில் பொருந்தி, காட்டில் உறைவதற்குப் பொருந்தாத இக்கோலத்தொடு உழிதருதலைச் செய்த செல்வர், இருக்கும் இடம் யாதென வினவில், ஏலம் மணக்கும் சோலையில் கூட்டமான வண்டுகள் யாழ்போல முரல, குருந்தம் மணம் நாறும் குன்றுகள் சூழ்ந்த, குளிர்ந்த சாரல்களையுடைய குறும்பலாவே.