திருமுறை 2 · 2.070 · 12

திருப்பிரமபுரம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரம்
தலம்
சீர்காழி - பல்பெயர்ப்பத்து
நாடு
சோழநாடு காவிரி வடகரை
குறிப்பு
திருச்சக்கரமாற்று

1

பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த் தோணிபுரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பைஅரன்மன்னு தண்காழி கொச்சை வயமுள்ளிட் டங்காதி யாயபரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம் நாம்பரவு மூரே.
சொற்பிரிப்பு
பிரமன்ஊர், வேணுபுரம், புகலி, வெங்குரு, பெருநீர்த் தோணிபுரம், மன்னு பூந்தராய், பொன் அம் சிரபுரம், புறவம், சண்பை,அரன் மன்னு தண் காழி, கொச்சைவயம், உள்ளிட்ட அங்கு ஆதிஆயபரமன் ஊர் பன்னிரண்டுஆய் நின்ற திருக்கழுமலம் - நாம் பரவும் ஊரே.
உரை

நிகர் இல் பிரமபுரம் - ஒப்பு இல்லாத பிரமபுரம். நீர் மேல் நின்ற மூதூர் - கடல் மேல் மிதந்த தொன்மையான ஊர், தோணிபுரம். அகலிய வெங்குரு- அகன்ற நிலப்பரப்பையுடைய வெங்குரு. அந்தண் தராய் - குளிர்ந்த பூந்தராய். அமரர் பெருமான் -தேவதேவன், மகாதேவன். இறைவனைப் பாடும் பொழுதும் நாம் கைதொழுதல் வேண்டும் என்பது இத்திருப்பாடலால் பெறப்படும் ஒழுக்கம்.

2

வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு வெங்குரு வெள்ளத் தோங்குந்தோணிபுரம் பூந்தராய் தூநீர்ச் சிரபுரம் புறவங் காழிகோணிய கோட்டாற்றுக் கொச்சை வயஞ்சண்பை கூருஞ் செல்வங்காணிய வையகத்தா ரேத்துங் கழுமலம் நாங்கருது மூரே.
சொற்பிரிப்பு
வேணுபுரம், பிரமன்ஊர், புகலி, பெரு வெங்குரு, வெள்ளத்துஓங்கும்தோணிபுரம்,பூந்தராய், தூ நீர்ச் சிரபுரம், புறவம், காழி,கோணிய கோட்டாற்றுக் கொச்சைவயம், சண்பை, கூரும் செல்வங்காணிய வையகத்தார் ஏத்தும் கழுமலம் - நாம் கருதும் ஊரே.
உரை

தண் புகலி - குளிர்ச்சியான புகலி. வெள்ளங் கொள்ளத் தொங்கிய - தொங்குதல் தோணி. தொகு -கூடிய. தொல் - பழைய. தலை பண்டு ஆண்ட மூதூர் - தலை - சிரம்; சிரபுரம். எற்றான் - ஏற்ற சிவபிரான்.

3

புகலி சிரபுரம் வேணுபுரஞ் சண்பை புறவங் காழிநிகரில் பிரமபுரங் கொச்சை வயம்நீர்மேல் நின்ற மூதூர்அகலிய வெங்குருவோ டந்தண் டராய்அமரர் பெருமாற் கின்பம்பகருநகர் நல்ல கழுமலம்நாங் கைதொழுது பாடு மூரே.
சொற்பிரிப்பு
புகலி, சிரபுரம், வேணுபுரம், சண்பை,புறவம்,காழி,நிகர் இல் பிரமபுரம், கொச்சை வயம், நீர்மேல் நின்ற மூதூர்,அகலிய வெங்குருவோடு, அம் தண் தராய், அமரர்பெருமாற்கு இன்பம்பகரும் நகர் நல்ல கழுமலம் - நாம் கைதொழுது பாடும் ஊரே.
உரை

தொல் நீரில் தோணிபுரம் - பழைய வெள்ளத்தில் மிதந்த தோணிபுரம். துயர் தீர் காழி- பிறவிக்குக் காரணமான துயர்களை நீக்கும் காழி. இன்தீர வேணுபுரம் - இனிய நீரினை உடைய வேணுபுரம். சிலம்பன் நகர் -சிரபுரம். பொன் நீர புன் சடையான் - பொன் நிறமுடைய அழகிய சடை உடையவன்.

4

வெங்குருத் தண்புகலி வேணுபுரஞ் சண்பை வெள்ளங் கொள்ளத்தொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம புரந்தொல் காழிதங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண் டாண்ட மூதூர்கங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங் கருது மூரே.
சொற்பிரிப்பு
வெங்குரு, தண் புகலி, வேணுபுரம், சண்பை, வெள்ளம் கொள்ளத்தொங்கிய தோணிபுரம், பூந்தராய், தொகு பிரமபுரம்,தொல் காழி,தங்கு பொழில் புறவம், கொச்சை வயம், தலை பண்டு ஆண்ட மூதூர்,கங்கை சடைமுடிமேல் ஏற்றான் கழுமலம் -நாம் கருதும் ஊரே.
உரை

தண்ணந்தராய்- குளிர்ந்த பூந்தராய். தாமரையானூர்- தாமரையான் பிரமன்;பிரமபுரம், தலை முன் ஆண்ட அண்ணல் நகர்- தலை - சிரம்; சிரபுரம். தண் புறவம்- குளிர்ந்த புறவம். சீர் அணியார் காழி -சீர் -பெருமை,கனம். விண்ணியல் சீர் வெங்குரு- விண்ணுலகத்துக்கு நிகரான வெண்குரு. நல் வேணுபுரம் - நல்ல - அழகிய வேணுபுரம். மேலார் ஏத்தும் கண்ணுதலான் மேவிய நற்கழுமலம் - மேலார் - ஞானியர், பத்தர், சித்தர் முதலியோர்; ஏத்தும்- வழிபடும்; கண்ணுதலான் -நெற்றிக்கண்ணினனாகிய சிவபிரான். மேவிய -இருக்கின்ற கழுமலம். கருதுதல்- தியானித்தல். கைதொழுது கருதுமூரே -கைதொழுத வண்ணம் தியானிக்கும் ஊர் கழுமலமே.

5

தொன்னீரில் தோணிபுரம் புகலி வெங்குருத் துயர்தீர் காழிஇன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழிலார் சண்பைநன்னீர பூம்புறவங் கொச்சை வயஞ்சிலம்ப னகராம் நல்லபொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலம்நாம் புகழு மூரே.
சொற்பிரிப்பு
தொல்-நீரில்-தோணிபுரம், புகலி, வெங்குரு, துயர் தீர் காழிஇன் நீர வேணுபுரம், பூந்தராய், பிரமன்ஊர், எழில் ஆர் சண்பை,நன்நீர பூம் புறவம், கொச்சை வயம், சிலம்பன்நகர், ஆம் நல்லபொன்நீர புன்சடையான் பூந் தண் கழுமலம் - நாம் புகழும் ஊரே.
உரை

சீரார் சிரபுரம் - புகழ் நிறைந்த சிரபுரம். நல்ல ஆராத் தராய் - நல்ல காணுந்தோறுந் தெவிட்டாத பூந்தராய். ஏரார் கழுமலம் - மிக்க அழகுடைய கழுமலம். என்று என்று உள்கி - இடைவிடாது தியானித்து. பேரான் நெடியவனும் நான்முகனும்- பெயரான் நீண்ட திருமாலும், பெயரான் நான்முகனாகிய பிரமனும். பெயர்தல் - அகலுதல், நீங்குதல். காண்பு அரிய- காணுதற்கு அரிய. காண இயலாத. அருமை இன்மையை உணர்த்திற்று.

6

தண்ணந் தராய்புகலி தாமரையா னூர்சண்பை தலைமுன் ஆண்டஅண்ணல்நகர் கொச்சை வயந்தண் புறவஞ்சீர் அணியார் காழிவிண்ணியல்சீர் வெங்குருநல் வேணுபுரந் தோணிபுரம் மேலா ரேத்துகண்ணுதலான் மேவியநற் கழுமலம்நாங் கைதொழுது கருது மூரே.
சொற்பிரிப்பு
தண் அம் தராய், புகலி, தாமரையான்ஊர் சண்பை, தலை முன் ஆண்டஅண்ணல் நகர், கொச்சைவயம், தண் புறவம் சீர்அணி ஆர் காழி,விண் இயல் சீர் வெங்குரு, நல் வேணுபுரம், தோணிபுரம், மேலார் ஏத்துகண்நுதலான் மேவிய நல் கழுமலம் - நாம் கைதொழுது கருதும் ஊரே.
உரை

நறவம் மிகு சோலைக் கொச்சை- தேன் கமழும் சோலைகளை உடைய கொச்சைவயம். தராய் - பூந்தராய். நான்முகன்றன் ஊர் - பிரமபுரம். விறலாய வெங்குரு- பெருமையுடைய வெங்குரு. விசயன் - அருச்சுனன். அரக்கன் - இராவணன். செற்றான்- அழித்தான்.

7

சீரார் சிரபுரமுங் கொச்சைவயஞ் சண்பையொடு புறவ நல்லஆராத் தராய்பிரம னூர்புகலி வெங்குருவோ டந்தண் காழிஏரார் கழுமலமும் வேணுபுரந் தோணிபுர மென்றென் றுள்கிபேரால் நெடியவனும் நான்முகனுங் காண்பரிய பெருமா னூரே.
சொற்பிரிப்பு
சீர்ஆர் சிரபுரமும்,கொச்சைவயம், சண்பையொடு, புறவம், நல்லஆராத் தராய், பிரமன்ஊர், புகலி, வெங்குருவோடு, அம்தண் காழிஏர் ஆர் கழுமலமும், வேணுபுரம், தோணிபுரம், என்றுஎன்று உள்கி,பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பு அரிய பெருமான் ஊரே.
உரை

சாயாப் பண்பார் சிரபுரம்- அழியாக் குணமுடையார், வருத்தமிலார் வாழும் சிரபுரம். தராய் -பூந்தராய். நண்பு - நட்பு. விருப்பம். வியப்பு - அழித்த. அகந்தையை அழித்த. வியத்தலுக்குக் காரணமானது அகந்தை. அதை அழித்த. விமலன் - தூயவன்.

8

புறவஞ் சிரபுரமுந் தோணிபுரஞ் சண்பைமிகு புகலி காழிநறவ மிகுசோலைக் கொச்சை வயந்தராய் நான்மு கன்றனூர்விறலாய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேலம் பெய்துதிறலால் அரக்கனைச்செற் றான்றன் கழுமலம்நாஞ் சேரு மூரே.
சொற்பிரிப்பு
புறவம் சிரபுரமும், தோணிபுரம், சண்பை, மிகு புகலி, காழி,நறவம், மிகு சோலைக் கொச்சைவயம், தராய், நான்முகன் தன்ஊர்விறல்ஆய வெங்குருவும், வேணுபுரம், விசயன் மேல் அம்பு எய்துதிறலால் அரக்கனைச் செற்றான்தன் கழுமலம் - நாம் சேரும் ஊரே.
உரை

செழு மலிய பூங்காழி -செழிப்பு மலிதல் உடைய அழகிய காழி. செய்ய கொழு மலரான் நன்னகர்- செழுமையும் கொழுமையும் உடைய மலர் தாமரை. அதன் மேலான் பிரமன். விழுமிய சீர் -மிக்க புகழுடைய 'இன்னபெயர் பன்னிரண்டும் கண்ணுதலான் கருதும் ஊரே', என்றதால் இவை பன்னிரண்டு ஊர்களின் பெயர் என்பதும் ஒரு ஊருக்கே கூறப்பட்ட பன்னிரண்டு பெயர்கள் அல்ல என்பதும் பெறப்படும்.

9

சண்பை பிரமபுரந் தண்புகலி வெங்குருநற் காழி சாயாப்பண்பார் சிரபுரமுங் கொச்சை வயந்தராய் புறவம் பார்மேல்நண்பார் கழுமலஞ்சீர் வேணுபுரந் தோணிபுரம் நாணி லாதவெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த விமல னூரே.
சொற்பிரிப்பு
சண்பை,பிரமபுரம், தண் புகலி, வெங்குரு, நல் காழி, சாயாப்பண்பு ஆர் சிரபுரமும், கொச்சை வயம், தராய், புறவம்,பார் மேல்நண்பு ஆர் கழுமலம் சீர் வேணுபுரம், தோணிபுரம் - நாண்இலாதவெண்பல் சமணரொடு சாக்கியரை வியப்பு அழித்த விமலன் ஊரே.
உரை

நிச்சல் விழவு ஓவா நீடார் சிரபுரம் - நாள்தோறும் விழாக்கள் ஒழியாத காலத்தாலும் இடத்தாலும் நெடுமை பொருந்திய சிரபுரம். நச்ச + இனிய = நச்சினிய - விரும்புதற்கு இனிய. அச்சங்கள் தீர்த்து அருளும் அம்மான் - பிறப்பச்சம் முதலியவற்றை நீக்கும் அம்மான். அம்மான்- அருமகன்.

10

செழுமலிய பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர்ப் புகலி செய்யகொழுமலரான் நன்னகரந் தோணிபுரங் கொச்சைவயஞ் சண்பை யாயவிழுமியசீர் வெங்குருவோ டோங்குதராய் வேணுபுரம் மிகுநன் மாடக்கழுமலமென் றின்னபெயர் பன்னிரண்டுங் கண்ணுதலான் கருது மூரே.
சொற்பிரிப்பு
செழு மலிய பூங்காழி புறவம், சிரபுரம், சீர்ப் புகலி, செய்யகொழுமலரான் நன்நகரம், தோணிபுரம், கொச்சைவயம், சண்பை, ஆயவிழுமிய சீர் வெங்குருவோடு, ஓங்கு தராய், வேணுபுரம், மிகு நல் மாடக்கழுமலம், என்று இன்ன பெயர் பன்னிரண்டும் - கண்நுதலான் கருதும் ஊரே.
உரை

காவி - கருங்குவளை மலர். இங்குக் 'கழுமலத்தின் பெயரை நாளும் பாவிய சீர்ப் பன்னிரண்டு நன்னூலா' என்றமையான், இவை கழுமலத்தைச் சார்ந்த நகரங்கள் எனப் பெறப்படும். புரையும் -ஒக்கும். பாவிய - பரவிய. பத்திமை -அன்பு. தலை விருப்பு - தலையாய அன்பு.

11

கொச்சை வயம்பிரம னூர்புகலி வெங்குரு புறவங் காழிநிச்சல் விழவோவா நீடார் சிரபுரம்நீள் சண்பை மூதூர்நச்சினிய பூந்தராய் வேணுபுரந் தோணிபுர மாகி நம்மேல்அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் கழுமலம்நாம் அமரு மூரே.
சொற்பிரிப்பு
கொச்சைவயம், பிரமன்ஊர், புகலி வெங்குரு, புறவம், காழிநிச்சல் விழ ஓவா நீடு ஆர் சிரபுரம், நீள் சண்பைமூதூர்,நச்சு இனிய பூந்தராய், வேணுபுரம், தோணிபுரம், ஆகி நம் மேல்அச்சங்கள் தீர்த்து அருளும் அம்மான் கழுமலம் - நாம் அமரும் ஊரே.
உரை

நாம் விரும்பும் ஊர், கொச்சைவயம் முதலாகத் தோணிபுரம் உள்ளிட்ட பன்னிரு பெயர்களைக் கொண்டதும் நம்மேல் வரும் அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் எழுந்தருளியிருப்பதுமான கழுமலமாகும்.

12

காவி மலர்புரையுங் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும்பாவியசீர்ப் பன்னிரண்டும் நன்னூலாப் பத்திமையாற் பனுவல் மாலைநாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்னமேவி யிசைமொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்பு ளாரே.இது பாண்டியராசனுடைய சுரப்பிணிதீர்க்கச்சென்றாசனத்திலிருந்தபோது அவ்வரசன் சுவாமிகளைநோக்கி எந்தவூரென்று வினவ, நாமின்னவூரென்றுதிருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகம்.
சொற்பிரிப்பு
காவிமலர் புரையும் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும்பாவிய சீர்ப் பன்னிரண்டும் நன்நூலாப்பத்திமையால் பனுவல்மாலைநாவின் நலம் புகழ் சீர் நால்மறையான் - ஞானசம்பந்தன் - சொன்னமேவி இசை மொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்புஉளாரே.
உரை

குவளை மலர் போலும் கண்களை உடைய மகளிர் வாழும் கழுமலத்தின் பெயர்களை நாள்தோறும் புகழ்மிக்க பன்னிரு நூல்கள் போல நாவினால் நலம் புகழ்ந்து ஞானசம்பந்தன் பாடிய இப்பனுவல் மாலையை இசையோடு மொழிபவர் விண்ணவர்களில் ஒருவராக எண்ணப்பெறும் மேலான விருப்புடையவர் ஆவர்.