1
சொற்பிரிப்பு
உரை
ஆகாயத்தில் பொருந்திய பிறையும் கங்கையாகிய நீரும் மருவிய நீண்ட சடையுடையானை, தேன் பொருந்திய கொன்றைப்பூ மாலையனை, தேவர்களால் தொழப்படும் தேவனை, முல்லைக்காட்டில் வாழும் பெண்மானுடன் கலைமான் பயிலும் திருக்கடம்பூரில் விரும்பித் தங்கும் கருத்துடையவனை, அவனுடைய தாள்களைத் தொழ, வீடுபேறு எளிதாகும்.