1
சொற்பிரிப்பு
உரை
பெண்ணை ஓர் பாகமாக உடையார்; திருமாலையும் ஓர் பாகமாக உடையவர்; மண்ணையும் தன்மேனியில் ஒருபாகமாக உடையவர்; விண்ணையும் ஓர் பாகமாக உடையவர்; வேதத்தையும் உடைய விமலர்; கண்ணும் ஓர் பாகமாக உடையவர்; அவர் கங்கையைச் சடையில் கரந்தார்; அவர் திருப்பெரும்புலியூரை விட்டுப் பிரியார். (தனது விசுவரூபத்தில் சிவபெருமான் மண்ணையும் மண்ணைப் படைக்கும் பிரமனையும், மண்ணைக் காக்கும் திருமாலையும், விண்ணையும் விண்ணில் கண்ணாக ஒளிரும் ஞாயிறையும் பாகமாக உடையவர். கபிலர் பாடிய பாடலைக் கபிலரது பாடல் என 6ஆம் வேற்றுமைச் செய்யுட் கிழமைபடக் கூறுதல் மரபு. அதுபோலச் சிவன் வேதத்தைச் செய்யுட் கிழமையாக உடையவர்.)