1
சொற்பிரிப்பு
உரை
தேவா! பெரியோனே! சிறியோமாகிய எங்கள் பிழையைப் பொறுத்து அருள்வாய்! அடியார்களுக்கு ஆ! ஆ!! என்று அங்கு அருள்செய்வாய்! ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய்! என்று ஏத்தி முனிவர்கள் வணங்கும் முதுகுன்றே.
தேவா! பெரியோனே! சிறியோமாகிய எங்கள் பிழையைப் பொறுத்து அருள்வாய்! அடியார்களுக்கு ஆ! ஆ!! என்று அங்கு அருள்செய்வாய்! ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய்! என்று ஏத்தி முனிவர்கள் வணங்கும் முதுகுன்றே.
என்னுடைய தந்தை இவன் என்று சூரியன் முதலாய தேவர்கள் வணங்குவார்கள். அவர்களுடைய உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு விளங்குவோனை, குரங்கு மரத்தின் மேலேறி பலரினமலர் கொண்டு வந்து மக்கள் தொழுவதற்கு முன் வழிபடும் முதுகுன்றே.
மலரும் பூவும் மிகுதியாகக் கொண்டு எப்பொழுதும் வழிபடும் அடியவர்களின் சிந்தையுள் விளங்குபவனை, பாடுகின்ற குயிலின் அருகில் கிளி நாமத்தைப் பேசிப் பயின்று ஏத்த, தோயும் முகிலும் சோலையும் மூடியிருக்கும் திருக்கோயில் முதுகுன்றே.
ஆராய்ந்து தெளிந்த அடியவர்கள் 'சிவனே' என்று இடந்தோறும் குருந்த மலரும் குராமரத்தின் மலரும் கொண்டு கையிலேந்தி, அமர்ந்திருந்தும் நின்றிருந்தும் இரவும் பகலும் ஏத்தும் பெருமையுடையது எதுவெனில், மேகம் முரிந்து தவழும் சோலைகளை உடையது முதுகுன்றே.
சேம வைப்பாக வைக்கப் பெற்ற நிதியமே! மணியே! என்று கூவி, வழிபடாது வீணே கழித்த காலத்தை நினைந்து வருந்தி, உள்ளம் கசிந்து 'சிவனே' என்பவருடைய சிந்தையிலிருப்பவர், சந்தனமரக் கொத்துக்களையும் குரவக் கொத்துக்களையும் வாரிக் கொணர்ந்து உந்தித்தள்ளும் மணிமுத்தாறுடைய முதல்வர் வீற்றிருக்கும் கோயில் முதுகுன்றே.
மணம் நிறைந்த கொன்றை, வன்னி, ஊமத்தை மலர் தழை தூவி, 'நம்பனே' என்று வழிபட, வேண்டுவார் வேண்டுவதே நல்கும் பெருமான் உறைகின்ற திருக்கோயில் எதுவெனில், கொம்புகள்மிகுதியாக உடைய குரவு, கொகுடி முல்லை மலர்களைக் குவித்து எங்கும் செறிந்த மலர்ச்சோலைகளில் வண்டு பண்பாடும் திருமுதுகுன்றே.
இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.
7ஆம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
மணங்கமழும் சோலைகள் சூழ்ந்த இலங்கையில் வாழ்கின்ற வேந்தனாகிய இராவணனை அழித்த நம்முடைய பெருமான் விரும்பி அமர்ந்திருக்கும் கோயில் எதுவெனில், சிவபெருமானைப் பூசித்து அடியவர்கள் துதிபாடி ஏத்த, வண்டுகள் மூசிப் பாடும் சோலைகளையுடைய திருமுதுகுன்றே.
அகவிதழ்களையுடைய தாமரை மலர்மேல் இருக்கும் பிரமனும் பாம்பணையின்மேல் துயிலும் திருமாலும் தோத்திரம் சொல்லி வழிபட்டுத் தொடரும் புண்ணியம் இல்லாதவர்களாயினர்; அவர்களால் தொடர முடியாத சோதியாக நின்றவனுடைய ஊர் எதுவெனில், முல்லை நிலத்து வேடர்கள் குழுமி நின்று வழிபட அயலே உள்ள முல்லைப் பூக்கள் முறுவல் செய்து நகைகாட்டும் முதுகுன்றே.
கரிய உடம்பினர், கஞ்சி உண்டு கடுக்காயைத் தின்பவர், உருகும் சிந்தையில்லாதவராகிய சமணர், தேரர் ஆகியோருக்கு எட்டாதவனாகிய சிவபிரான் உறையும் திருக்கோயில் எதுவென்னில், கோணலாய் மூங்கில் சிறிதே வளையச் சிறு மந்திகள் அகில் மரக்கிளையின் மேலிருந்து தாவி நடனஞ் செய்யும் முதுகுன்றே.
ஒலிக்கும் கடல் சூழ்ந்த அழகிய, குளிர்ந்த காழி நகரின் ஞானசம்பந்தன் வேதாகம முறைப்படி முனிவர்கள் வணங்கும் திருக்கோயில் முதுகுன்றை நிறைவுபடப் பாடிய இப்பதிகத்தைக் குழாமாகக் கூடிப்பாட வல்லார்கள் பிறைசூடிய பெருமானின் திருவடிகளைப் பிரியார்.