1
சொற்பிரிப்பு
உரை
தேவர் முதலியோரைக் காக்க நஞ்சை அமுதமாக உண்டாய்! உமையை ஒரு பாகமாகக் கொண்ட அம்மையப்பரே! என்று பயபக்தியுடன் தொண்டராகிப் பணி செய்து திரியும் அடியார்களுடைய துயரங்கள் அவர்களை அண்டாத வண்ணம் நீக்குவானாகிய எம் தந்தை உறையும் ஊர் எதுவெனில், வெண்ணிறத் தாமரை மலர்மேல் கருநிற வண்டு யாழ் போல முரலும் திருவெண்காடே.