1
சொற்பிரிப்பு
உரை
ஆண்மான் தங்கும் அழகிய கையினை உடையீர்! நறுமணம் வீசும் கரிய, கூந்தலாகிய அலைகளை உடைய கங்கை வாழும் செஞ்சடையில் பாம்பையும் பிறையையும் ஒருங்கே இருக்கச் செய்தீர்! வாழை பொன் போலக் குலையீனும், கமுகம் செம்பவளம் போலப் பழுக்கும் திருக்குடவாயிலாகிய நிலையில் உள்ள திருக்கோயிலையே கோயிலாகக் கொண்டு நின்றீரே!